வீரப்பன் காட்டில் விழிப்புணர்வு பிரசாரம்
கோயம்பத்தூர்:
தமிழக, கேரள எல்லைப் பகுதி காட்டில் உள்ள கிராமங்களில் வீரப்பனுக்கு எதிராக அதிரடிப்படை போலீஸார்விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினர்.
கோவை மாவட்டம் ஆலந்துரை அருகேயுள்ள பொலுவம்பட்டி கிராமத்தில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தைபோலீஸார் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர். வீரப்பன குறித்த தகவல்களைத் தங்களுக்குக் கொடுத்து அவனைப்பிடிக்க உதவுமாறு அப்போது அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
மாநில கூடுதல் டி.ஜி.பி. அலெக்சாண்டர், ஐ.ஜி. பாலச்சந்திரன், ஐ.ஜி. நடராஜ் ஆகியோர் உள்பட பல போலீஸார்இதில் கலந்து கொண்டனர். வீரப்பன் மற்றும் அவனது கும்பலில் உள்ள முக்கிய கூட்டாளிகள் குறித்தபுகைப்படங்களையும் கிராமத்து மக்களிடம் அவர்கள் விநியோகித்தார்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஐ.ஜி. பாலச்சந்திரன் பேசுகையில், பிப்ரவரி 2-ம் தேதி வீரப்பன் கும்பலுடன் மோதல்நடந்தது உண்மையே. அந்த மோதலின்போது வீரப்பன் கும்பலைச் சேர்ந்த ஒருவர் காயமடைந்தார். தொடர்ந்துவீரப்பனைத் தேடும் பணி நடந்து வருகிறது.
வாளையாறு காட்டுப் பகுதியில்தான் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் இன்னும் உள்ளனர். விரைவில்எங்களிடம் அவர்கள் பிடிபடுவார்கள் என்றார்.
அலெக்சாண்டர் கூறுகையில், வீரப்பனைத் தேடும் பணியில், பொதுமக்களடமிருந்து எங்களுக்கு நல்ல ஒத்துழைப்புஇருக்கிறது என்றார்.
இதற்கிடையே வாளையாறு போலீஸார் கூறுகையில், முழு வேகத்துடன் வீரப்பனைத் தேடும் பணி நடந்துவருகிறது. காவா, மலம்புழா, பாரபட்டி ஆகிய காட்டுப் பகுதிகளில் உள்ள குகைகளில் வீரப்பன் கும்பலைத் தேடிஅதிரடிப்படை போலீஸார் சோதனையிட்டனர்.
இதற்கிடையே, கோவை-திருப்பூர்-ஈரோடு மார்க்கத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் நிறுத்திசோதனையிடப்படுகின்றன. வீரப்பனின் கும்பலில் உள்ள ரமேஷ் மற்றும் ஆலப்பாக்கம் முருகேசன் ஆகியோர்காட்டிலிருந்து தப்பி விட்டதாக வந்த தகவலையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications