தமிழக அழகியின் நிதி வசூல்
டெல்லி:
குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கரின் காதலியும், ஜெர்மன்பாப் இசைப் பாடகருமான சபரினா இசை நிகழ்ச்சி நடத்தி நிதிவசூல் செய்து கொடுக்கவுள்ளார்.
சபரினா தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இதுகுறித்து சபரினா ஷெட்லூரின் உறவினர் சத்யம் ரங்கசாமிகூறுகையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் உடைமைகளையும்,உறவினர்களையும் இழந்து தவித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காக ஜெர்மனில் இசை நிகழ்ச்சி நடத்த பாப் இசைப் பாடகி சபரினாதிட்டமிட்டுள்ளார். முதலில் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி வசூல் செய்து குஜராத் பூகம்ப நிவாரண நிதியாகக்கொடுக்குமாறு அவரிடம் ஆலோசனை கூறினோம்.அதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஏற்கனவே துருக்கியில் ஏற்பட்ட பூகம்ப நிவாரண நிதியாக இசை நிகழ்ச்சி நடத்தி சபரினா ரூ 50 லட்சம் வசூல்செய்து கொடுத்துள்ளார். அதே போல் இப்போதும் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி வசூல் செய்து கொடுப்பார் என்றார்.
பிரபல டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் அவரது மனைவி பார்பராவிடமிருந்து பிரிந்த பின் அவருடன் சேர்த்துக்கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் சபரினா. இதுகுறித்து ரங்கசாமியிடம் கேட்டபோது, அவர்கள் இருவரும் நல்லநண்பர்கள். இருவருமே திருமண வயதை எட்டி விட்டவர்கள். அவர்கள் முறையாகத் திருமணம் செய்தால் அதில்தவறென்ன இருக்கிறது என்றார்.
சபரினாவின் தந்தை கிருஷ்ணன் தமிழகத்திலுள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இவர் 1967 ல் ஜெர்மனுக்குச்சென்று விட்டார். இவரது தாய் கேரளாவைச் சேர்ந்தவர். முதலில் பெங்களூரில் நர்சாகப் பணிபுரிந்தார். பின்னர்இத்தாலி சென்று அங்கிருந்து ஜெர்மனி சென்றார். அங்கு கிருஷ்ணனைச் சந்தித்துக் காதலித்து மணம் புரிந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications