பம்பையில் கிறிஸ்தவ விழா
பத்தனம்திட்டா:
ஆசியாவிலேயே மிகப் பெரிய கிறிஸ்தவ மாநாடு கேரள மாநிலம் பத்தனம்திட்டாவின் பம்பை நதிக்கரையில் ஞாயிறன்று துவங்கியது.
மாலங்கரா சிரியன் மார்தோமா சர்ச்சின் தலைவரான டாக்டர் பிலிப்போஸ் மார் கிறிஸோஸ்டம் மார்தோமா மெட்ரோபாலிடன் இம்மாநாட்டைதுவக்கி வைத்தார்.
அவரின் துவக்கவுரையில், தற்போது உலகில் நிலவும் பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு காரணம் கடவுளின் விருப்பமாகும். வாழ்க்கையில்பாவங்களை தொலைக்க மனிதர்கள் தவறியதால்தான் கடவுள் கோபம் கொண்டு தண்டனை வழங்குகிறார் என்றார்.
மதப்பிரசாரக டாக்டர் சாமுவேல் கமலேஸன் தனது உரையில், தேவாலயங்களின் அதிகாரங்கள் உலகம் முழுவதற்கும் ஒரே மாதிரியாக இருக்க வகைசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
மார்தோமா எவாஞ்சலிகல் சங்கத்தின் தலைவர் கீவர்கீஸ் மார் அதனாஸியஸ் விழாவிற்கு தலைமை தாங்கினார். மார்தோமா சர்ச்சின் பிஷப்புகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் ரமேஷ் சென்னிதாலா, பிரான்ஸிஸ் ஜார்ஜ் இவர்களுடன் விழாவின் சிறப்பு சொற்பொழிவாளர்களாக அமெரிக்காவின ரெ.டாக்டர். சிலோபஸ் ஜே. லாரா, டெல்லியின் ரெ. வல்சன் தம்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications