பா.ம.க. முடிவு தெரிந்ததுதான் ..பா.ஜ.க
காஞ்சிபுரம்:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து ஒரு வருடத்திற்கு முன்பே பாட்டாளி மக்கள் கட்சி விலகத் திட்டமிட்டிருந்தது என்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சிப்பொதுச் செயலாளர் இல.கணேசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்து வந்தது பாட்டாளி மக்கள் கட்சி. இக்கட்சி முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த தமிழகராஜீவ் காங்கிரஸ் கட்சி குறித்து அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டி வந்தது. பின்னர் கருணாநிதியைக் குற்றம் சுமத்தி கூட்டணியிலிருந்து விலகிஅ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளது.
தற்போது தி.மு.க.வுடன் தமிழ் மாநில காங்கிரஸ் சேருவதற்கு பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஆட்சேபணை தெரிவிக்காது. அ.தி.மு.க.வுடன் பா.ம.க.சேர்ந்த பிறகும் காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இது அ.தி.மு.க.வுக்கு பா.ம.க.வந்ததைகாங்கிரஸ் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதையே காட்டுகிறது.
சாதிய கட்சிகள் தி.மு.க. கூட்டணிக்கு வருவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஆட்சேபிக்காது. தி.மு.க. கூட்டணிக்கு எந்தக் கட்சிவேண்டுமானாலும் வரலாம்.
பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி விட்டதால் 2 மத்திய அமைச்சர் பதவிகள் காலியாகி உள்ளது. அந்தப் பதவிக்குபாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்று பா.ஜ.க ஒருபோதும் வலியுறுத்தாது. பிரதமர் வாஜ்பாய் என்ன முடிவு எடுக்கிறாரோஅதை நாங்கள் பின்பற்றுவோம் என்றார் இல. கணேசன்.
யு.என்.ஐ.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications