த.மா.கா. வுக்கு வலை விரிக்கும் தி.மு.க.
திருத்துறைப்பூண்டி (தஞ்சாவூர்):
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும், தமிழக சட்டசபைத் தலைவர் பழனிவேல் ராஜனும் ஞாயிறன்று தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்சந்தித்து பேசினர்.
முன்னதாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி விலகியதையடுத்து த.மா.கா. வை தி.மு.க. வுக்கு இழுக்கும் முயற்சிகள் ஒருபக்கம் நடந்து வருகிறது. தமிழக சட்டசபைத் தலைவர் பழனிவேல்ராஜன் கூறுகையில், தி.மு.க.விட்டு பிரிந்து போன த.மா.கா. மீண்டும் தி.மு.க.வுக்குவருவதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றார்.
தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் போது கல்வி அமைச்சர் அன்பழகன், தமிழக மக்களைக் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு த.மா.கா.நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று சூசகமாகத் தெரிவித்தார். தற்போது அ.தி.மு.க.வுடன்பா.ம.க.சேர்ந்துள்ள நிலையில் த.மா.கா. வை தி.மு.க.வுக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தியாகி திருநாவுக்கரசு பெயர்ப் பலகை திறப்பு விழாவிற்குப் பின் பயணியர் விடுதியில் தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனாரும், தமிழக சட்டசபை சபாநாயகர் பழனிவேல்ராஜனும் திடீரென சந்தித்துப் பேசினர். இவர்களது சந்திப்பு அரைமணி நேரம்நடந்தது.
தேர்தல் சமயத்தில் நிலவும் கூட்டணி குழப்பத்தை ஒட்டி நடைபெற்ற இச்சந்திப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. பேச்சுவார்த்தை பற்றி கேட்டதற்குமூப்பனாரை தங்கள் அணிக்கு வருமாறு அழைத்ததாக சபாநாயகர் தெரிவித்தார்.
மூப்பனார் கருத்து சொல்ல மறுத்து விட்டாலும் கூட்டணி பற்றி திங்களன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெறும் த.மா.கா. நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்தெரிவிக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications