இன்சூரன்ஸ் துறையில் இறங்கும் வங்கிகள்
கோவை:
யுனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா மற்றும் குளோபல் டிரஸ்ட் வங்கி ஆகியவை வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்துஇந்தியாவில் புதிய இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்தவுள்ளது.
இது குறித்து யுனிட் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் தலைவர் பாலசுப்ரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்கூறியதாவது;
யுனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா மற்றும் குளோபல் டிரஸ்ட் வங்கி ஆகியவை சர்வதேச நிறுவனம் ஒன்றுடன்இணைந்து இன்சூரன்ஸ் துறையில் இறங்க முடிவு செய்துள்ளது. இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் யு.டி.ஐ. 10 சதவீதம்,குளோபல் டிரஸ்ட் வங்கி 26 சதவீதம் முதலீடு செய்கின்றன.
குளோபல் டிரஸ்ட் வங்கி15 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. யுனிட் டிரஸ்ட் ஆப் இந்தியாவும் 4.5லட்சம் பங்குதாரர்களைக் கொண்டுள்ளது.
இவர்களைக் கொண்டு முதலில் இத் திட்டம் அமலுக்குக் கொண்டு வரப்படும். அமெரிக்காவில் தங்களதுவருமானத்தில் 30 சதவீதத்தை பத்திரங்களில் முதலீடு செய்கின்றனர். இந்தியாவில் போதிய விழிப்புணர்வுஇல்லாததால் இது வெறும் 3 சதவீதமாக மட்டுமே இருந்து வருகிறது என்றார்.


Click it and Unblock the Notifications
