யூதர்கள் மீது பாலஸ்தீனர் தாக்குதல் .. 8 பேர் சாவு
அசூர் (இஸ்ரேல்):
இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் பஸ் நிலையத்தில் இஸ்ரேல் ராணுவ வீரர்களும், பொதுமக்களும் கூட்டமாக நின்று கொண்டிருந்த இடத்தில், பஸ்சில் வந்தபாலஸ்தீனியர் ஒருவர், கூட்டத்தினரை நோக்கி பஸ்சால் மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் இறந்து போனவர்களின் சடலங்களும், அவர்கள்அணிந்திருந்த ஷூக்களும் கிடந்தன.
டெல் அவிவ் உயர் போலீஸ் அதிகாரி யோசி சிட்போம் கூறுகையில், பாலஸ்தீனியர்களின் நாசச் செயல் இது. 8 பேர் இறந்துள்ளனர். பலர்காயமடைந்துள்ளனர் என்றார்.
இஸ்ரேல் அரசு அதிகாரிகள் கூறுகையில், இஸ்ரேல் ராணுவ வீரர்கள், செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் சென்று, காரில் சென்ற பாலஸ்தீன அதிபர்யாசர் அராபத்தின் பாதுகாவலர் மசூத் அயாத் என்பவரைக் கொலை செய்தனர். இந்தத் தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனும்கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்தனர்.
டெல் அவிவில் 8 பேரைக் கொன்ற இந்த பஸ், பயணிகள் பஸ்சுக்காகக் காத்திருந்த காலை வேளையில் மோதியது. மோதிய பிறகு, பஸ் போனதும்போலீஸார் சில கிலோ மீட்டர் தூரம் வரை துரத்திக் கொண்டு சென்றனர். இருப்பினும் அந்த பாலஸ்தீனரை பிடிக்க முடியவில்லை.
கடந்த செப்டம்பர் முதல் பாலஸ்தீன ராணுவ வீரர்களுக்கும், இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை 400 பேர்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 300 பேர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள். 61 பேர் இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள். 13 பேர் இஸ்ரேலில்வாழும் அரபு நாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications