காஷ்மீர் துப்பாக்கிச் சண்டை .. 3 தீவிரவாதிகள் சாவு
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், செவ்வாயன்று இரவு பாதுகாப்பு படையினருடன் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து ஏ.கே.47 துப்பாக்கிகள் இரண்டை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.
திரக்பால் பகுதியில் தேசீய மாநாட்டுக் கட்சியின் தலைவர் அலி முகமது பட்டின் வீட்டின் மீது தீவிரவாதிகள் வீசிய கையெறிகுண்டு வெடித்ததில் அவரின்மனைவி உள்பட நால்வர் காயமடைந்தனர்.
லால்போரா சபாபோரா பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஒரு வீடு சேதமடைந்ததுடன் ஒரு பெண்ணும் காயமடைந்தார். பாரமுல்லா மாவட்டத்தில்,அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் மாருதி கார் ஒன்றின் மீது சுட்டதில் அதிலிருந்த மூவர் காயமடைந்தனர்.
போலீஸ் காவலில் ஒருவர் இறந்ததற்கு ஆட்சேபம் தெரிவித்து மீர் சாஹிப் பாரமுல்லா பகுதி மக்கள் பனியையும்பொருட்படுத்தாது ரோடு மறியலில் ஈடுபட்டனர். பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதியான அந்நபர்மறைவான இடத்திலிருந்து ஆயுதங்களை கைப்பற்ற சென்றபோது நடைபெற்ற சண்டையில் அவர் இறந்ததாகபோலீசார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, அடிக்கடி போலீஸ் காவலில் இருப்பவர்கள் இறப்பது அதிகரிப்பதை எதிர்த்தும், ரஜெளரி பகுதியில்15 அப்பாவிகள் கொல்லப்பட்டதை எதிர்த்தும் வக்கீல்கள் சங்கம் விடுத்த அழைப்பை அடுத்து கோர்ட்டுகள்எதுவும் புதனன்று செயல்படவில்லை.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications