ரங்கராஜன் மனைவிக்கு டிக்கெட் கிடைக்குமா?
டெல்லி:
மறைந்த மத்திய மின்துறை முன்னாள் அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி வரும தேர்தலில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில்போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.
திருச்சி நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டசபைத் தேர்தல் நடக்கும் போது நடக்கலாம் என்று தெரிகிறது. அப்போதுதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.
இதுகுறித்து முன்னாள் மத்திய மின்துறை அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி டெல்லியில் புதன்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், நான்விரைவில் பிரதமர் வாஜ்பாயை சந்திக்கவுள்ளேன்.
அவரிடம் நான் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு உதவி செய்யுமாறு கேட்பேன். இது தொடர்பாக நான் மத்திய உள்துறை அமைச்சர்அத்வானியையும் சந்திப்பேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நான் அவர்களைச் சந்திக்க உள்ளேன் என்றார்.
இதற்கு பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், முதலில் கிட்டி நான் தேர்தலில்போட்டியிட மாட்டேன் என்றார். இப்போது திருச்சி தொகுதியில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன் என்று கூறுகிறார். அவர் முன்னுக்குப் பின் முரணாகப்பேசுகிறார் என்றார்.
இதற்கிடையே, பா.ஜ.க வைச் சேர்ந்த இன்னொரு பிரமுகர் கூறுகையில், திருச்சி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது.அங்கு காங்கிரஸ் வெற்றி பெறும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. இதனால் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திறமையான, செல்வாக்கானவேட்பாளரை நிறுத்த வேண்டும்.
ஏனெனில் வரும் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ம.க, த.மா.கா ஆகிய பலம் வாய்ந்த கட்சிகள் போட்டியிடுகின்றன. இதனால்திருச்சி தொகுதியில் பா.ஜ.க சார்பில் கிட்டியை நிறுத்துவது குறித்து மேலிடம் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்றார்.
யு.என்.ஐ.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications