மூப்பனாருக்கு ஜெ. விதித்த கெடு

Subscribe to Oneindia Tamil

Moopanar"சும்மா இருக்கும் மூப்பனார், தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்க ஒரு வாரம் கெடு விதித்துள்ளார்அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

பாட்டாளி மக்கள் கட்சி சமீபத்தில் திமுக கூட்டணயிலிருந்து தாவி, அதிமுக அணிக்கு மாறியதும், தமிழக அரசியல்அரங்கு கலகலக்கத் தொடங்கி விட்டது.

பக்கத்து வீட்டுக்காரர் சரியில்லை என்பதற்காக வேறு வீடு மாறுவது போல, வாழப்பாடி ராமமூர்த்தி உள்ளிட்ட பலகாரணங்களுக்காக டாக்டர் ராமதாஸ் தனது "ஜாகை யை மாற்றிக் கொண்டு விட்டார்.

JayaLallithaராமதாஸ் அதிமுகவுக்கு வந்துள்ளதால், ஏற்கனவே அங்கு இருக்கும் மூன்று கட்சிகள் நெளியத் தொடங்கியுள்ளன.மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், பெரியார் பேரன் இளங்கோவன் தலைமையிலான காங்கிரஸ்,திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவைதான் இந்த "மும்மூர்த்திகள்.

மூப்பனார், இளங்கோவனைப் பொறுத்தவரை ராமதாஸை ஏற்றுக் கொள்ள ஒரே தயக்கம்தான். அது, ராமதாஸின்விடுதலைப் புலி ஆதரவு என்பதே. திருமாவளவனைப் பொருத்தவரை, பாட்டாளி மக்கள் கட்சி, தலித் விரோதகட்சி என்பதாகவே அவர் பார்க்கிறார்.

langovanபாட்டாளி மக்கள் கட்சியை ஏற்க முடியாது. அது கூட்டணியில் இருந்தால் நாங்கள் வெளியேறுவோம் என்றுதிருமாவளவன் எச்சரித்துள்ளார். அப்படி விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறினால், வட மாவட்டங்களில் உள்ளவன்னிய சமூக எதிர்ப்பு ஓட்டுக்கள், தலித் ஆதரவு வாக்குகள் அதிமுகவுக்கு எதிராக திசை திரும்பும் வாய்ப்புகள்உள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சி இருப்பதால், நாங்கள் அதிமுக கூட்டணியில் நீடிப்பதில் தயக்கம் இல்லை என்றுமூப்பனாரும், இளங்கோவனும் கூறி வந்தாலும் கூட இன்னும் வெளிப்படையாக கூட்டணியில் நீடிக்கிறோம்,எந்தக் குழப்பமும் இல்லை என்று இருவரும் கூறவில்லை. மாறாக, நாங்கள் மதச் சார்பற்ற கூட்டணியில் தான்உள்ளோம், அதிமுக கூட்டணியில் இல்லை என்று, தாங்கள் தெளிவாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டுமக்களைக் குழப்பி வருகிறார்கள்.

தேர்தல் விரைவில் வரவுள்ளதால் இப்போதே பல்வேறு திட்டங்களைத் தயாரிக்கத் தொடங்கி விட்டார்ஜெயலலிதா. அதை படிப்படியாக அமல்படுத்த வசதியாக, தொகுதிப் பங்கீட்டை விரைவில் முடிக்க அவர்நினைக்கிறார். ஆனால் த.மா.கா.வும், காங்கிரஸும், விடுதலைச் சிறுத்தைகளும் இன்னும் தெளிவாக தங்களதுமுடிவை அறிவிக்காததால், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தாமதமாகிக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சென்னை அதிமுக தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள்சந்திப்பின்போது, எந்தக் கட்சி வந்தாலும் சேர்த்துக் கொள்வோம், கூட்டணிக் கட்சிகளின் ஒருமித்த முடிவுக்குப்பிறகே தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடங்கும். அதற்கு வசதியாக, ஒரு வார காலத்திற்குள் த.மா.கா.தனது முடிவை தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

Ramdossமூப்பனாருக்கு,ஜெயலலிதா கெடு விதித்து விட்டார். தனது நிலை என்ன என்பதை மூப்பனார் விரைவில் அறிவிக்கவேண்டிய நிலை. ஒரு பக்கம் கருணாநிதி அழைப்பு விடுக்கிறார், மறுபக்கம் ஜெயலலிதா கெடு விதிக்கிறர்.

இப்போது மூப்பனார் முன் பல கேள்விகள் உடனடி பதிலுக்காகக் காத்துக் கொண்டுள்ளன. திமுக கூட்டணியில்இணைவதா, பா.ம.க.வை சகித்துக் கொண்டு கூட்டணியில் நீடிப்பதா, காங்கிரஸையும், விடுதலைச்சிறுத்தைகளையும் சேர்த்துக் கொண்டு, ஜாதிக் கட்சிகளுடன் இணைந்து 3-வது அணியை அமைப்பதா என்றஇந்தக் கேள்விகளுக்கு மூப்பனார் எப்படி பதில் காணப் போகிறார் என்று தெரியவில்லை.

மூப்பனாரின் பதிலைப் பொறுத்தே தமிழக சட்டசபைத் தேர்தலின் முடிவுகள் இருக்கும் என்பதில்சந்தேகமேயில்லை. தமிழகத்தில் மூன்றாவது அணி வருமா, அல்லது திமுக, அதிமுக கூட்டணி என்ற நேரடி மோதல்இருக்குமா என்பது இன்னும் ஒரிரு வாரங்களில் தெரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+