த.மா.கா.வில் நீடிக்கும் கூட்டணிக் குழப்பம்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதா அல்லது மூன்றாவது அணியை அமைப்பதா அல்லது தி.மு.க அணியில் சேர்வதா என்பதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என த.மா.கா கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளும் த.மா.கா.வை தங்கள் அணியில் இணையுமாறு அழைத்து வருகின்றன.
வெள்ளிக்கிழமை தி.மு..க. தலைவர் கருணாநிதி த.மா.கா. தங்கள் அழைப்புக்கு த.மா.கா. பதிலளிக்கவில்லை என கூறினார். ஆனால் அவர்கள்எப்போது வேண்டுமானாலும் கூட்டணியில் வந்து இணையலாம் என கூறினார்.
ஆனால் த.மா.கா.தலைவர் எந்த விதமான அவசர முடிவையும் எடுக்க விரும்பவில்லை. தீவிரமான சிந்தனைக்கு பிறகு உறுதியான முடிவை எடுப்பார்.மக்கள் நலனுக்கான நல்ல முடிவை எடுப்பார் என த.மா.கா. வினர் தெரிவிக்கின்னறனர்.
புதிய நீதிக் கட்சி தலைவர் சண்முகத்தால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் மூன்றாவது அணிக்கு தலைமை தாங்க வருமாறு முப்பனாருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒரு முறை பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இது குறித்தும் மூப்பனார் எந்த முடிவும் எடுக்கவில்லை.
சோனியா காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்த ஜெயந்தி நடராஜனை, மூப்பனார் அனுப்பி வைத்தார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து சோனியா காந்தியுடன்பேச்சு வார்த்தை நடத்தி விட்டு வந்தார்.
அவர் மூப்பனாரிடம் பேச்சு வார்த்தை குறித்த விவரங்களை தெரிவித்தார். காங்கிரஸ் தூதர் விரைவில் சென்னை வந்து ஜெயலலிதாவுடன் பேச்சு வார்த்தைநடத்தவிருக்கிறார். அதன் பின் நிலைமை தெளிவாகும் என தெரிகிறது.
பா.ம.க. ஜெயலலிதா தலைமையிலான கூட்டணியில் இருப்பது த.மா.கா.வுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அ.தி.மு.க. குறைந்தஅளவிலான தொகுதிகளை மட்டுமே ஒதுக்கினால் என்ன செய்வது என்ற எண்ணமும் த.மா.கா.வில் நிலவி வருகிறது.
திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தை அணியை தங்கள் அணிக்கு வருமாறு கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். அவர்களும் பா.ம.க. இருக்கும்கூட்டணியில் இருக்க தயக்கம் காட்டி வருகின்றனர். ஆனாலும் அவர்கள் மூப்பனாரின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
ஜெயலலிதா ஒரு வார காலத்திற்குள் முடிவு தெரிவித்தது நல்லது என கூறியிருந்தாலும், முப்பனார் இன்னும் சிந்தனையிலேயே இருக்கிறார். கட்சிகள்மட்டுமல்ல, தமிழக மக்களும் மூப்பனார் எப்போது முடிவெடுப்பார்? என்ன முடிவெடுப்பார் என ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications