மாறனின் கூட்டாளி கிருஷ்ணமூர்த்தி கைது
கோவை:
வீரப்பனின் வலது கரமாக விளங்கிய மாறனின் கூட்டாளியான கிருஷ்ணமூர்த்தியைப் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இவரை கோவையில் உள்ள ஒருரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரப்பனின் கூட்டாளியான மாறனைப் போலீசார் சிறுவாணி மலைப் பகுதியில் கைது செய்ததாகத் தெரிவித்தனர். மாறனின்கைது குறித்து இன்னும் மர்மம் நீடித்து வருகிறது. அதேசமயம், மாறனின் முக்கியக் கூட்டாளிகள் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கூட்டாளில்., தமிழர் மீட்புப் படை என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து நடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தியைப் போலீசார் சுற்றி வளைத்துப்பிடித்தனர். இவரைக் கடலூர் அருகே பிடித்தாலும், கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் விடுதலைப் படை என்ற பெயரில் மாறன் இயக்கம் நடத்தி வந்தாலும், இந்த இயக்கத்தில் கூட்டாளியாக இருந்து வந்த கிருஷ்ணமூர்த்தி தமிழர்மீட்பு படை என்ற படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
கிருஷ்ணமூர்த்தியின் சொந்த ஊர் பழனி அருகே உள்ள புஷ்பத்தூர். இவர் கடந்த 91ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் கை குண்டு வீசியுள்ளார்.இது தொடர்பாகவும் போலீசார் இவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், இவரை கடலூரில் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications