ஆஸ்திரேலியாவை வெல்வோம்: இந்தியா நம்பிக்கை
டெல்லி:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்வது உறுதி. அது 2-1 என்ற கணக்கிலா அல்லது 1-0 என்ற கணக்கிலா என்பதுதான் பிரச்சனையே என்கிறார் இந்திய அணியின் புதிய மேலாளரான ராஜேஷ் செளகான்.
40 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய ராஜேஷ் செளகான், தற்போதைய ஆஸ்திரேலியா போட்டிக்காக இந்திய அணியின் மேலாளராகநியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இந்தியா அப்ராட் நியூஸ் சர்வீசுக்கு அளித்த பேட்டியில் செளகான் கூறிய கருத்துகள்:
எளிதில் வெற்றி பெற உதவும் அனில் கும்ப்ளே அணியில் இல்லையென்றாலும், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு சிரமம் தரக்கூடிய சுழல்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். எனவே, இந்தியா வெற்றி பெறுவதில் சந்தேகமில்லை.
எஸ்.ரமேஷ், எஸ்.எஸ்.தாஸ் துவக்க ஜோடி உள்பட இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆஸ்திரேலிய அணியினரை காட்டிலும் திறமையுடன் உள்ளனர்.
அணியின் மேலாளர் என்ற வகையில் அணியின் வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.அணிவீரர்களின் உடன்பிறவா சகோதரனாகவே இருந்து அவர்களை அரவணைத்து செல்வேன்.
அணியினர் அனைவரையும் மதித்து அவர்களின் கருத்தறிந்து நடந்து கொள்வுது அவசியம். அதே போல் வீரர்கள் பற்றி மற்றவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் பார்வையாளர்களுடன் கலந்துரையாடுவதற்கும் அனுமதியளிக்கப்படும். ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுத் தருவதுபோன்ற செயல்களை வீரர்கள் மறுக்கக்கூடாது.
மீண்டும் இந்திய அணியில் வேறு வகையில்(மேலாளராக) இடம் பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. அணியின் மேலாளராக நியமிக்கப்படுபவர் தன்னைநிலைநிறுத்தி கொண்டு திறமையுடன் பணியாற்றுவதற்கு ஏதுவாக குறைந்தது ஒரு வருட காலத்திற்காவது நியமிக்கப்பட வேண்டும் என தனது ஆதங்கத்தைவெளிப்படுத்தினார் செளகான்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications