ஜெ. புகாருக்கு தேர்தல் கமிஷன் மறுப்பு
சென்னை:
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை (எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) பயன்படுத்துவதால் முறைகேடுகள் நடக்கவாய்ப்புள்ளது என ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ம்ருத்ருஞ்சய் சாரங்கி மறுத்துள்ளார்.
இந்த எந்திரங்களை பயன்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்குத் தொடர்ந்துள்ளநிலையில், வரும் தேர்தலில் தமிழகம் முழுவதும் இந்த எந்திரங்கள் நிச்சயம் பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் இந்த எந்திரங்களின் செயல்பாட்டை நிருபர்களுக்கு புதன்கிழமை விளக்கிக் காட்டிய சாரங்கி கூறுகையில்,
மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் இந்த எந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல்செய்துள்ள வழக்கை எதிர்த்து இந்திய தேர்தல் கமிஷன் பதில் மனு தாக்கல் செய்யும்.
இந்த எந்திரங்களை பயன்படுத்துவதால் முறைகேடுகள் எதையும் செய்ய முடியாது, கள்ள ஓட்டு போட முடியாது. யாருடையவாக்கையும் திருத்த முடியாது. இந்த எந்திரங்கள் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில்வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளன.
வழக்கமாக வாக்குச் சீட்டு மூலம் ஓட்டுப் போடும்போது என்னென்ன விதிமுறைகள் கையாளப்படுமோ அவை தான் இங்கும்கையாளப்படும். வாக்குச் சீட்டு-பெட்டிக்குப் பதில் எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவ்வளவு தான். வாக்குப் பதிவுமையத்தில் உள்ள அதிகாரி பட்டனை அழுத்துவார். அதன் பின்னர் தான் வாக்காளர்கள் வாக்களிகக முடியும்.
இந்த எந்திரங்கள் சீலிடப்பட்டவை. வாக்குப் பதிவு நடந்த பின்னர் ஒரு வருடம் வரை தேர்தல் முடிவுகளை அதில் பத்திரப்படுத்திவைக்க முடியும்.
இந்த எந்திரங்களை பயன்படுத்தும் முறை குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்கப்படும். இந்தப் பயிற்சிமதுரையில் பிப்ரவரி 26ம் தேதி நடக்கும்.27ம் தேதி திருச்சியிலும், 28ம் தேதி சென்னையிலும் இந்தப் பயிற்சி நடக்கும்.
28ம் தேதி அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இந்தப் பயிற்சி அளிக்கப்படும். தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பே இந்தஎந்திரங்கள் வாக்குப் பதிவு மையங்களில் வைக்கப்படும். இதனால், வாக்களார்கள் இந்த எந்திரங்களை முன்னதாகவே பார்த்துக்கொள்ளவும், அதன் செயல்பாட்டைத் தெரிந்து கொள்ளவும் முடியும் என்றார்.
இந்த எந்திரரங்களைத் தயாரித்துள்ள பாரத் எலெக்ட்ரானிஸ் நிறுவனத்தின் துணை மேலாளர் காணிக்கராஜ் கூறுகையில், இந்தஎந்திரத்தில் யாரும் ஒரு முறைக்கு மேல் ஓட்டு போட முடியாது. இவை பேட்டரியால் இயங்குபவை. இதனால் வாக்குப் பதிவுமையத்தில் மின் இணைப்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.
இந்த எந்திரத்தில் 64 வாக்காளர்களின் பெயர்கள், சின்னங்கள் வரை வைத்திருக்க முடியும். அதிகபட்சம் 3,824 பேர் வாக்களிக்கமுடியும். ஒரு வாக்குச் சாவடியில் 1,500 பேருக்கு மேல் ஓட்டுகள் இருப்பதில்லை.
வாக்குப் பதிவு முடிந்த பின்னர் கடைசியாக ஒரு பட்டன் அழுத்தப்படும். இதற்குப் பின்னர் யாருமே இதில் வாக்குகளை பதிவுசெய்ய முடியாது. தேர்தல் ஏஜெண்டுகள் இந்த கடைசி பட்டன் அழுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.தமிழகத்தில் மொத்தம் 68 சதவீத வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications