"ஆட்டம் காணும்" வட-கிழக்கு இந்தியா
ஷில்லாங்:
கடந்த 20 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் 393 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஷில்லாங்கில் உள்ள மத்திய பூகம்பவியல் ஆராய்ச்சிமையம் தெரிவிக்கிறது.
பங்களாதேஷ், மியான்மர், பூடான் நாடுகளின் எல்லையை ஒட்டிய இந்திய பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களின் அளவு ரிச்டர் ஸ்கேலில் 2 முதல் 7 வரைபதிவாகியுள்ளது.
இப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பெரும்பாலும் ஸில்ஸாரில் மையம் கொண்டிருந்தன.
பூகம்ப பாதிப்பு அதிகம் உள்ள வடகிழக்கு இந்தியாவில் பூகம்பம் எப்போது ஏற்படும் என்பது கணிக்க முடியாது.
எனினும், அரசும், பொதுநல அமைப்புகளும் இணைந்து இப்பகுதி மக்களுக்கு பூகம்பத்திலிருந்து பாதுகாத்து கொள்ளும் முறை பற்றி பயிற்சி அளிக்கவேண்டியது அவசியம்.
மியான்மர்-மணிப்பூர் எல்லையில் 1988 மற்றும் 1994ல் ஏற்பட்ட நிலநடுக்கமே கடந்த 20 ஆண்டுகளில் அதிகபட்ச அளவாக இருக்கிறது. 1994ம்ஆண்டில் அதிக பட்ச அளவாக 36முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications