தள்ளாத வயதிலும் தளராத முயற்சி
சியாட்டில்:
அன்னை தெரஸாவிற்கு நினைவுப்பூங்கா கட்டுகிறார் 77 வயதான சியாட்டில் நகரப் பெரியவர் ஒருவர்.
முன்னாள் கட்டிட காண்ட்ராக்டரான டாமினிக் காஸ்போடர் என்ற கத்தோலிக்க பெரியவர், ஏழைகளுக்கு தொண்டுசெய்து நோபல் பரிசு பெற்ற அன்னை தெரஸாவின் தொண்டால் ஈர்க்கப்பட்டவர். 1997ம் ஆண்டு மறைந்தஅன்னை தெரஸாவின் நினைவாக நினைவு பூங்கா ஒன்றை சியாட்டில் நகருக்கு வெளியே அமைக்கிறார்காஸ்போடர்.
10 ஏக்கர் நிலத்தில் அமையும் இந்த நினைவுப் பூங்காவின் மையத்தில் அன்னை தெரஸாவிற்கு நினைவு மண்டபம்கட்டப்படும். கோபுரவடிவில் அமையும் இதன் உயரம் 137 அடியாக இருக்கும். இம்மண்டபத்தில் அன்னைதெரஸாவின் சிலையுடன் இயேசு கிறிஸ்துவின் சிலையும் இடம் பெறும்.
இதன் ஒரு பக்கத்தில் அமையும் 100 அடி உயரமுள்ள தூண் போன்ற நினைவுச் சின்னம் அமெரிக்காவில்குடியேறியவர்களால் பாதிக்கப்பட்ட அமெரிக்க பூர்வகுடியின மக்களின் (செவ்விந்தியர்களின்) நினைவாகஎழுப்பப்படுகிறது.
மற்றொரு பக்கத்தில் எண்கோண வடிவில் யூத படுகொலைக்கான நினைவு மண்டபம் அமைக்கப்படுகிறது.
இந்த நினைவு மண்டபங்களுக்காக இதுவரை காஸ்போடர் 2,50,000 டாலர்களை செலவழித்துள்ளார். மேலும்50,000 டாலர்கள் வரை செலவு செய்யவுள்ளார்.
காஸ்போடர் வடிவமைத்த நினைவு மண்டபத்தின் மாடலை ஓரெகான் மாகாண நிர்வாகம் முதலில் நிராகரித்துவிட்டது. எனினும், அதே மாடலில் தான் தற்போதைய நினைவுமண்டபம் கட்டப்படுகிறது. இது குறித்து கருத்ததெரிவித்த காஸ்போடர், சிறந்த படைப்புகள் சில நேரங்களில் நிராகரிக்கப்படுவதுண்டு என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications