திருப்பதி மலைக்கு இழுவை ரயில்
திருப்பதி:
திருப்பதி மலையில் ரூ 100 கோடி செலவில் இழுவை ரயில் அமைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது.
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து போகின்றனர். அவர்கள் மலையடிவாரமான திருப்பதிநகரிலிருந்து மலை ஏறி ஏழுமலை வெங்கடாசலபதியை சந்திக்க வேண்டும்.
இதற்கு 2 மலைப்பாதைகள் பயன் படுத்தப்படுகின்றன. ஒரு மலைப்பாதை பக்தர்கள் ஏறுவதற்கும் இன்னொன்று பக்தர்கள் இறங்குவதற்கும்பயன்படுகின்றன.
தினமும் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருப்பதிக்கு வந்து போவதால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படுவதாக ஆந்திர அரசுக்குதெரிவிக்கப்பட்டது.
1982 ம் ஆண்டிலேயே இழுவை ரயில் அமைப்பது குறித்து தேவஸ்தான உறுப்பினர்கள் ஆந்திர அரசுக்குத் தெரிவித்தனர். தீவிர ஆய்வில் இருந்த இந்தத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆந்திர அரசு இப்போது ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது:
திருப்பதியில் இழுவை ரயில் திட்டம் ரூ100 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முடிவடைந்து விட்டன. லர்சன்அன்ட் டர்போ நிறுவனம் இந்தப் பணியை எடுத்து நடத்தும்.
இழுவை ரயில் மூலம் மலை அடிவாரத்தில் இருந்து திருமலைக்கு 15 நிமிடத்தில் போய் விடலாம். இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 500 க்கும் மேற்பட்டபக்தர்கள் திருமலைக்குச் செல்லலாம் என்றார்.
தலைமுடியைத் திருடிய பெண் கைது:
திருப்பதியில் பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்தும் இடத்திலிருந்து ரூ 500 பெறுமானமுள்ள முடியை எடுத்து தனது சேலைக்குள் மறைத்து வைத்தது தொடர்பாகபெண் துப்புரவுத் தொழிலாளியைப் போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications