சென்னையில் கிரிக்கெட் வாரியத்தின் சிறப்புக் கூட்டம்
சென்னை:
கிரிக்கெட் ஊழல் தொடர்பாகவும், வாரிய உறுப்பினர்கள் தொடர்பாகவும் கடந்தாண்டு பல்வேறு வகையில் விமர்சனம் செய்து வந்த இந்தியகிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய முன்னாள் தலைவர் இந்தர்ஜித் சிங் பிந்த்ரா மீதான ஒழுங்கு நடவடிக்கை பற்றி முடிவு செய்ய சென்னையில் வாரியத்தின் சிறப்புபொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
ஸ்பிக் வழக்கில் ஆஜராக வேண்டியிருந்ததால் வாரியத் தலைவர் ஏ.சி.முத்தையா டெல்லியில் ஜனவரி 25ம் தேதி நடைபெற்ற வாரியத்தின் காரியக்கமிட்டிகூட்டத்தில் பங்கு பெறவில்லை.
காரியக்கமிட்டி, அணியின் வீரர்கள் மீது மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும். வாரியத்தின் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லைஎனக்கூறி பிந்த்ரா மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சென்னை பொதுக்குழுகூட்டத்தில் முடிவு செய்ய தீர்மானித்திருந்தது.
பிந்த்ராவும் பஞ்சாப் கிரிக்கெட் சங்க உறுப்பினர் ஒருவரையும் விசாரித்த வாரியத்தின் ஒழுங்குநடவடிக்கை குழு தனது அறிக்கையை வாரியத்திடம் அளித்துள்ளது.
இந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து சென்னை சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என வாரியத்தின் தலைவர் ஏ.சி.முத்தையாடெல்லி கூட்டத்திற்கு பின் தெரிவித்திருந்தார்.
சென்னைக் கூட்டத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கிரிக்கெட் ஜாம்பவன் சுனில் கவாஸ்கர் அளித்த விலகல் கடிதம்பற்றியும் முடிவு செய்யப்படவுள்ளது.
அகாடமியின் வளர்ச்சிக்காக 1.74 கோடி ரூபாய் நிதியை வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. பயிற்சியாளர்களுக்கான பயிலரங்கம் நடத்தவும், பயிற்சி முறைகள்குறித்த கருத்தரங்குகள் நடத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications