திருச்சி: விபத்துக்கள் 2 சாவு 4
திருச்சி:
திருச்சி அருகே உள்ள மணப்பாறையில் புதன்கிழமை மாலை நடந்த இரண்டு சாலை விபத்துகளில் ஒரு பெண் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர்காயமடைந்தனர்.
இந்த விபத்துகள் குறித்து போலீசார் கூறுகையில், திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு அருகே இருக்கும் உடையான்பட்டி கிராமத்திற்கு அருகேபுதன்கிழமை பிற்பகல் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர்படுகாயமடைந்தார்.
இறந்தவர்கள் டிராக்டரின் ஓட்டுநர் ஜோசப் (30), ஜோதிம் அனி (25) மற்றும் ரத்தினம் (25) என அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விபத்தில்காயமடைந்த கந்தசுவாமி (27) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துவரங்குறிச்சிக்கு அருகே வியாழக்கிழமை காலை சென்னையிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென சாலையை கடந்த பெண் மேல்மோதாமல் இருப்பதற்காக பேருந்தை ஓட்டுநர் திருப்பிய போது எதிரே வந்த பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் பாதசாரி ஒருவர் கொல்லப்பட்டார். 10 பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவருக்கும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக என போலீசார் கூறினர்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications