மாறன் கைதில் சந்தேகம் வேண்டாம்: டிஜிபி
சென்னை:
வீரப்பனின் கூட்டாளியும், தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவருமான மாறன் கைதில் யாரும் சந்தேகம் அடைய வேண்டாம் என்று கூடுதல் போலீஸ்டி.ஜி.பி குமாரசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் கூடுதல் டிஜிபி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மாறன் பிப்ரவரி 2 ம் தேதியே கைது செய்யப்பட்டு விட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் சிறிதளவும் உண்மையில்லை.
குள்ளன்சாவடி போலீஸ் நிலையத் தாக்குதலில் மாறன் ஏற்கனவே போலீஸாரால் தேடப்பட்டு வந்தவர். இதில் இவரது கூட்டாளிகளையும் போலீஸார்தேடி வந்தனர்.
தமிழ்நாடு, கர்நாடக கூட்டு அதிரடிப்படை க்யூ பிரிவு போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகுதான் மாறன் பிடிபட்டிருக்கிறார். மேலும்மாறனைப் பிடிப்பதற்கு சத்யமங்கலம் காட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்களும் உதவி புரிந்தார்கள்.
வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் கூட்டு அதிரடிப்படை போலீஸாருக்கு கண்டிப்பாக வெற்றி கிட்டும். மாறனைப் போலீஸார் பிடிக்கும் போது அவருடன்சேர்த்துக் கைது செய்யப்பட்டவர்களை விசாரித்து வருகிறோம் என்றார் குமாரசாமி.
முன்னதாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பிப்ரவரி 2 ம் தேதியே மாறனை போலீஸார் கைது செய்து விட்டார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications