குஜராத் மக்கள் மனநிலையை ஆராய வரும் ஜெர்மன் நிபுணர்
டெல்லி:
பூகம்பத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தில் கோடிக்கணக்கில் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் மக்களின்மன நிலையை ஆராயும் வகையில் சர்வதேச மனோத தத்துவ நிபுணர் ஒருவர் ஜெர்மனியிலிருந்து வரும் மார்ச் மாதம் குஜராத் செல்லவுள்ளார்.
குஜராத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி குடியரசு தினத்தன்று திடீரென்று ஏற்பட்ட பூகம்பத்தில் சூரத், அகமதாபாத், ராஜ்கோட், கட்ச் உள்பட பலமாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பலர் வீடுகள், உறவினர்கள் மற்றும் உடைமைகளை இழந்தனர்.
தங்களது சொந்த உறவினர்களை இழந்த மக்கள் மனதளவில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவின்பிற மாநிலங்கள் உள்பட வெளிநாட்டினரும் நிதியுதவி மற்றும் நிவாரண உதவிகள் செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து வேர்ல்டு விஷன் என்ற தன்னார்வ அமைப்பு, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.அவர்களுக்கு தொடர்ந்த மன நல ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து வேர்ல்டு விஷன் அமைப்பின் துணை இயக்குநர் ஜோஷி கூறுகையில், மார்ச் மாதம் ஜெர்மனியைச் சேர்ந்த மனநோய்நிபுணர் ஒருவர், குஜராத்துக்குவருவார். அவர், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசுவார்.
அதற்குப்பின் பூகம்பத்தால் உறவினர்கள் மற்றும் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு எவ்விதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதுகுறித்து ஆலோசனைகள் வழங்குவார்.
பூகம்பத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கட்ச் மாவட்டத்தில் உள்ள பச்சாவ், அஞ்சார் மற்றும் ரப்பார் பகுதிகளில் ஏற்கனவே இரண்டுமுறை இந்தியா விஷன் பல நிவாரண உதவிகளைச் செய்திருக்கிறது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல ஆலோசனைகளையும்வழங்கியிருக்கிறது.
தற்போது வேர்ல்டு விஷனில் வேலை செய்பவர்கள் குஜராத் பூகம்பம் குறித்து அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு வருகிறார்கள். அவர்கள்இதுகுறித்து சமர்பிக்கும் அறிக்கைப்படி பிப்ரவரி 28 ம் தேதி முதல் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இறுதியாக முடிவு எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.
பூகம்பத்தால் இடிந்து தரைமட்டமான வீடுகள், பள்ளிகள், சுகாதார மையங்கள் ஆகிவற்றை மீண்டும் கட்டத் தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு ஜோஷி கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications