மீண்டும் ஒரு மிக்-21 விமான விபத்து: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கவுஹாத்தி:
அசாம் மாநிலம் தேஸ்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானதில் பைலட்டும்,பைலட் பயிற்சியாளரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்திய விமானப் படைக்கு சொந்தமான இந்த விமானத்தில் பைலட்டும், பயிற்சியாளரும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
அஸ்ஸாம் மாநிலம் சரியால் பகுதியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள போர்கியாங் என்ற இடத்தில் இவ்விபத்து நடந்ததாக விமானப்படைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விமானம் ஏன் விபத்துக்குள்ளானது என்று தெரியவில்லை.
சமீபகாலத்தில் இந்திய பல மிக்-21 விமானங்களை இழந்து வருகிறது. தொடர்ந்து இந்த ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications