ஆஸியிடமிருந்து நாம் நிறைய கற்க வேண்டியுள்ளது: ஸ்ரீநாத் பேட்டி
டி. ராம்ராஜ்
பெங்களூர்:
ஆஸ்திரேலியா தொடர்ந்து 15 போட்டிகளில் வென்றுள்ளது. அந்த அணியிடமிருந்து இந்தியா நிறைய கற்றுக்கொள்ள வேண்டி உள்ளது என இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜவஹல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
மும்பைக்கு கிளம்பும் முன் தட்ஸ் கிரிக்கெட் டாட் காம் என்ற வெப் சைட்டிற்கு தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில்,
ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து 15 போட்டிகளில் வெற்றி பெற்று வந்துள்ளது. அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் பலஇருக்கின்றன.
இந்திய மைதானங்களைப் பொருத்தவரை இந்திய அணியின் திறன் நன்றாகவே இருந்து வந்துள்ளது. எனவே இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயானபோட்டி கடுமையானதாகவே இருக்கும்.
இந்திய சுற்றுப்பயணத்திற்கு முன்பே ஆஸ்திரேலிய அணியினர் இந்திய அணியை பற்றியையும் வீரர்களை பற்றியும் கூறிய கருத்துகள் பெரிய விஷயமே அல்ல.
அவையெல்லாம் பத்திரிகைகளுக்கு செய்தியானதோடு சரி. அவையெல்லாம் இந்திய அணியினரை எந்த வகையிலும் பாதிக்கப் போவது இல்லை.
இந்தியா வரும் கிளென் மெக்ராத்திடமிருந்து தனிப்பட்ட முறையில் பல விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.
இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளே அணியில் இல்லையென்றாலும் அணியின் வெற்றியானது மற்ற வீரர்களின் கையில் உள்ளது. கும்ப்ளேஅளவிற்கு அனுபவம் இல்லையென்றாலும் அணியில் இடம்பெற்றுள்ள மற்ற சுழல் பந்து வீச்சாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவர் எனநம்புவோம் என தெரிவித்துள்ளார் ஸ்ரீநாத்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ஜான் ரைட்டின் பயிற்சியின் கீழ் இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் ஆடவுள்ளது. இதனால் இப்போட்டிஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா அணியைப் பொருத்தவரை, தொடர்ந்து 15 போட்டிகளை வென்றதோடு அதனை அந்நிய மண்ணிலும் தொடர்கதையாக்க வேண்டியகட்டாயத்தில் உள்ளது. இந்திய அணியில் நரேந்திர ஹிர்வானி இடம்பெற்றிருப்பது தனது அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் என ஸ்டீவ் வாஹே ஒத்துக்கொண்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications