செயின்ட் கிட்ஸ் வழக்கில் வி.பி.சிங் மகன் ஆஜர்
டெல்லி:
செயின்ட் கிட்ஸ் தீவில் தான் வங்கி கணக்கு எதுவும் துவங்கவில்லை என முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் மகன்அஜேயா சிங் தெரிவித்துள்ளார்.
செயின்ட் கிட்ஸ் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்றத்தில், நீதிபதி பாரிஹோக் முன்னிலையில் அஜேய சிங்தெரிவித்த தகவல்கள்:
1989ல் செயின்கிட்ஸ் தீவில் உள்ள பர்ஸ்ட் ட்ரஸ்ட் கார்ப்போரேஷன் வங்கியில் தன் பெயரில் வங்கி கணக்குதுவங்கப்பட்டு தனது தந்தையின் சார்பாக அந்த வங்கிக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுவதை மறுத்தார்.
இது தொடர்பாக வந்த பத்திரிகை செய்தியை அடுத்து இந்தியா வந்து சம்பந்தப்பட்ட பத்திரிகையில் மறுப்பு செய்திவிட்டபோதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுபற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.அமலாக்கத்துறை அதிகாரி அருண் சர்மா முன்னிலையில் இதற்கு தகுந்த பதிலளிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட வங்கியை சேர்ந்த மக்லீயான், பைரோன் ஆகியோர் பற்றி தனக்கு தெரியாது. அஜேய சிங் என்றபெயரில் உள்ள வங்கிகணக்கில் மேற்கொள்ளப்பட்ட வங்கி நடவடிக்கைகள் பற்றியும் தெரியாது. அந்த கணக்கைதுவக்கியதற்கான பத்திரங்களில் தனது கையெழுத்தோ அல்லது தனது தந்தையின் கையெழுத்தோஇடம்பெறவில்லை என தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாககுற்றம்சாட்டப்பட்டுள்ள சந்திராசாமி மற்றும் மாமாஜி என்ற அகர்வால் ஆகியோர் மீதான இந்த வழக்கில் முன்னாள்பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் கே.கே.திவாரிக்கும் பங்குண்டு என்பதற்கானஆதாரங்கள் இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
வி.பி.சிங்கின் பெயரைக் கெடுக்க அவரது மகன் பெயரில் சந்திராசாமி தான் செயிண்ட் கிட்ஸ் தீவில் வங்கிக்கணக்கை ஆரம்பித்ததாக புகார் கூறப்படுகிறது. இவருக்கு அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தநரசிம்மராவ் உதவியதாகத் தெரிகிறது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications