பூமியை தாக்கும் விண்கற்கள்
வாஷிங்டன்:
பல நூறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியைத் தாக்கிய விண்கற்களால் டைனோஸர் போன்ற பல்வேறு இனங்கள் அழிந்தன.
பல சிறிய கற்கள் தொடர்ந்து பூமியைத் தாக்கிக் கொண்டு தான் உள்ளன. ஆனால், அவை அளவில் சிறியனவாக இருப்பதால் காற்று மண்டலத்திலேயேஎரிந்துபோய் மீதமுள்ள மிகச் சிறிய பகுதி தான் பூமியில் வந்து விழுகிறது.
ஆனால், பெரிய விண் கற்களால் பூமிக்கு எப்போதுமே ஆபத்து காத்துக் கொண்டு தான் இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
சயின்ஸ் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைகழக பேராசிரியர் கிறிஸ் கைபா தெரிவித்துள்ள தகவல்கள்:
250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெர்மியன் விளைவால் பெரும்பாலான உயிரினங்கள் அழிந்து பேலியோஸோயிக் யுகம் முடிவுக்கு வந்தது.
அதன் பின் தொடங்கிய மீஸோஸோயிக் யுகத்தில் உருவான டைனோஸர் இனம் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியுடன் விண்கற்கள் மோதியதால்அழிந்துவிட்டன.
சீனா மற்றும் ஜப்பான் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட படிவுகளில் உள்ள கார்பன் மூலக்கூறு அமைப்பானது விண்வெளியில் காணப்படும் வகையைசார்ந்ததாக இருப்பதால் பெர்மியன் நிகழ்வு நடந்ததற்கு காரணம் விண்கற்கள் மோதலாக இருக்கும் எனத் தெரிகிறது.
விண்வெளியில் சுற்றிவரும் விண்கற்களில் 1கி.மீ முதல் 10 கி.மீ அளவு விட்டம் கொண்ட விண்கற்கள் பற்றி பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் ஆராய்ந்துவருகின்றன.
நாஸா ஆரம்பித்துள்ள விண்வெளி பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 10 கி.மீ அளவுள்ள விண்கற்கள் அனைத்தையும் பற்றிஆராயப்பட்டுள்ளது.
அவற்றின் பாதை மற்றும்செயல்பாடு ஆகியவற்றின் மூலம் அவைகளால் பூமிக்கு ஆபத்தில்லை என அறியப்பட்டுள்ளது.
எனினும் பூமியில் மோதும் விண்கற்களில் 1 கி.மீ.அளவுள்ள விண்கற்கள் கூட பூமியில் உள்ள மனித இனத்திற்கு பெரும் சேதத்தை விளைவிப்பதோடு அணுமழை பொழிவிற்கும் காரணமாக அமைந்துவிடும்.
இந்த விண்கற்கள் ஒரு திட்டமிட்ட பாதையில் செயல்படாததால் அவற்றினால் ஏற்படும் ஆபத்தை தவிர்ப்பதற்காக நாஸா திட்டமிட்டுள்ளபடிஏவுகணைகளை செலுத்தி விண்கற்களை தாக்கி அழிக்கலாம். அல்லது பூமியின் பாதையிலிருந்து அவற்றை விலக்கி விடலாம்.
அவ்வாறு எதுவும் செய்ய முடியவில்லை என்றால் அவை பூமியை தாக்கும் முன் கடற்கரையோரம் உள்ள மக்களையும், விண்கற்கள் மோதகூடியபகுதியில் உள்ள மக்களையும் வேறு இடத்திற்கு அப்புறபடுத்துவதோடு நீண்ட நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை சேமித்து வைப்பது தான் சிறந்தவழி.
ஏனெனில், விண்கற்களின் தாக்குதலால் ஏற்படும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உணவு உற்பத்தியும் பாதிக்கப்படக்கூடும்.
தற்போதுள்ள புள்ளிவிவரங்களின் படி, ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறை அல்லது இருமுறை பூமியை போன்ற வடிவுள்ள நியோ எனப்படும்(நியர் எர்த்ஆப்ஜெக்ட்) விண் கற்கள் பூமியைத் தாக்கி வருகின்றன.
இத்தாக்குதலின் போது பாதிக்கப்படும் மனித உயிர்களில் இருபதாயிரம் பேரில் ஒருவர் மட்டுமே உயிர்பிழைக்க வாய்ப்புள்ளது.
பூமியுடன் மோதி உயிரினங்களை அழிக்கும் விண்கற்களில் உயிரினங்களும் வாழக்கூடும். அவை அடுத்த யுகத்திற்கான உயிரின வளர்ச்சிக்கு காரணமாகஅமையும்.
சமீபத்தில், சான்டா குரூஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைகழகம் விண்வெளி சூழ்நிலையில் உருவாக்கிய செயற்கை செல்சுவர் போன்றவற்றின் மூலம்விண்வெளியில் உயிரினங்கள் வாழ முடியும் என்பது கண்கூடு என இந்த கருத்தரங்கை வெளியிட்டிருந்த சயின்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications