எக்ஸ்கியூஸ் மீ, ஒரு 10 சீட் கிடைக்குமா?: பரிதாபத்தில் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்பெல்லாம் தமிழகத்தில் தேர்தல் என்றால் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது (எந்த திராவிட கட்சி மீது சவாரிசெய்யப் போகிறது) என்று நாடு முழுக்க ஒரு பெருத்த ஆர்வம் எழும்.

மத்தியில் ஆட்சியில் இருந்ததால் தனது அதிகாரத்தைக் கொண்டு மாநில அரசுகளை சும்மா விளையாட்டுக்கு கலைத்துக்கொண்டிருந்த காங்கிரஸ் மீது எம்.ஜி.ஆருக்கே பயம் இருந்தது.

இதனால் தான் கருணாநிதியை முந்திக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்து வந்தார். காங்கிரசும் 30 எம்.பி. சீட், 50எம்.எல்.ஏ. சீட் என்று பேரம் பேசி வாங்கும் நிலையில் இருந்தது.

ஆனால், இப்போது யாராவது 10 எம்.எல்.ஏ. சீட் கொடுத்தால் போதும், அவர்களுடன் கூட்டணிக்கு ரெடி என்று பச்சையாகசொல்லியும் கூட காங்கிரசைக் கண்டுகொள்ள ஆளே இல்லை.

மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தி.மு.கவோ காங்கிரஸ் பக்கம் திரும்பிக் கூட பார்ப்பது இல்லை.

இருந்த ஒரே வழி அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர்வது தான். ஆனால், பல முறை மத்திய அமைச்சர்களாக இருந்த மிக மூத்தகாங்கிரஸ் தலைவர்களை சோனியா அனுப்பிப் பார்த்தும் கூட ஜெயலலிதா அவர்களிடம் பேசிய விதம் காங்கிரசை அதிர்ச்சிஅடைய வைத்துள்ளது.

5 அல்லது 6 சீட் தான் கொடுக்க முடியும் என்பதை மிகத் தெளிவாக அவர்களிடம் சொல்லிவிட்டார் ஜெயலலிதா. த.மா.காவோடுசேர்ந்து வந்தால் அதுவும் கிடைக்காது. மூப்பனாருக்குத் தான் சீட் தருவேன், அவர் உங்களுக்கு என்ன தருகிறாரோ அதை வாங்கிக்கொண்டு பேசமால் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

டெல்லியில் இருந்து தலைவர்கள் வந்த பிளைட் சார்ஜுக்கு உரிய அளவுக்காவது சீட் கொடுக்க வேண்டாமா என்று நொந்து போய்சொல்கிறார் காங்கிரஸ் தொண்டர் ஒருவர். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் எங்கே இருக்கிறது என்று பதில் கேள்வி கேட்கும்அ.தி.மு.கவினர் சோனியா முகத்துக்காகத் தான் காங்கிரசுக்கு சில இடங்களை எங்கள் தலைவி கொடுக்கிறார். கட்சிக்காக இல்லைஎன்கின்றனர்.

ஆனால், வெறும் தலைவர்களை மட்டுமே கொண்ட தமிழக காங்கிரசால் இதை ஜீரணிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் டபுள்டிஜிட் எண்ணிக்கையிலாவது சீட் தர வேண்டும். அதாவது 10 இடமாவது கொடுத்தால் தான் கூட்டணியில் சேர்வதற்கு அர்த்தம்இருக்கும் எனக் கூறியிருக்கிறார் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன்.

அத்தனை இடங்களில் நிற்க உங்களிடம் ஆட்கள் இருக்கிறார்களா என வழக்கம் போல கிண்டலடிக்கின்றனர் அ.தி.மு.கவினர்.

அ.தி.மு.க. தலைவி ஜெயலலலிதா மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் பேசுவதையே கூட கேவலமாகக் கருதுகிறார். கூட்டணிக்குவருகிறோம் என காங்கிரஸ் தான் அ.தி.மு.கவிடம் வலிய சென்று கூறியது. அதற்கு ஓ,கே. சொன்ன ஜெயலலிதா 5 சீட் தர்ரேன்,சந்தோஷமா போய் தேர்தல் வேலை பாருங்க என்று கூற அதிர்ச்சியில் காங்கிரசுக்கு மூச்சுபேச்சு இல்லாமல் போய்விட்டது.

தனியே இருப்பதால் தானே மதிக்காமல் பேசி வருகிறீர்கள் என்று கூறிக் கொண்டு மூப்பனாரின் தோளில் ஏறி அமர்ந்து கொண்டதுகாங்கிரஸ். த.மா.கா-காங்கிரஸ் இணைந்து போட்டியிடும் என காங்கிரஸ் தலைமை அறிவித்தது.

இப்ப என்ன செய்வீங்க... என்று பெப்பே காட்டிய காங்கிரசுக்கு அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் சுக்குக் கஷாயம்காய்ச்சி வெறும் வயிற்றில் கொடுத்தார் ஜெயலலிதா.

மொத்தமாவே 32 இடம் தான் த.மா.கவுக்குத் தருவேன், த.மா.கா. தான் காங்கிரசுக்கு அதிலிருந்து இடங்களை ஒதுக்கிக்கொடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட இப்போது மூப்பனாரே வெறுத்துப் போய்விட்டார்.

கொடுக்கப்படும் 32 இடத்தில் போட்டியிட 1000 பேர் நம் கட்சியிலேயே மனு கொடுப்பார்கள். இதில் காங்கிரசுக்கு நாம்எங்கிருந்து இடம் ஒதுக்குவது. எதற்கு இந்த காங்கிரஸ் சுமை என்று மூப்பனார் நினைக்க ஆரம்பித்துவிட்டார். ஆனால், கிடைத்தஒரே பிடி மூப்பனார் தான். அவரை விட காங்கிரஸ் தயாராக இல்லை.

வாங்க... பேசாமல் மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவோம் என மூப்பனாருக்கு காங்கிரஸ் யோசனை சொல்லிவருகிறது.

அதே நேரத்தில் எந்த முடிவும் எடுக்காமல், நிருபர்களின் எந்தக் கேள்விக்கும் தெளிவாக பதில் சொல்லாமல் அரசியல் நடத்திக்கொண்டிக்கும் த.மா.காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கடைசியில் மூன்றாவது அணி அமைக்கும் நிலைக்குத் தான்தள்ளப்பட்டுள்ளார்.

யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்த கேள்விகளுக்கு கலந்து பேசுகிறேன், ஆலோசிக்கிறேன், செயற்குழு முடிவு செய்யும்,ஆலோசனைக் குழுவுடன் ஆலோசிக்கிறேன் என்றெல்லாம் தொடர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருக்கும் மூப்பனாரால் முதலில்தி.மு.க. தலைவர் கருணாநிதி டென்ஷன் ஆனார். 40 சீட் தருகிறோம். இஷ்டம் இருந்தா வாங்க, இல்லாட்டி போங்க என்றுகூறிவிட்டு வேறு வேலைகலை பார்க்க ஆரம்பித்துவிட்டார் கருணாநிதி.

கருணாநிதியைப் போலவே ஜெயலலிதாவும் ஹை-பி.பியில் காத்திருந்தார். எப்படியெல்லாம் பேச வேண்டுமோ, யார் யார்மூலமாக பேச வேண்டுமோ எல்லாமே செய்து பார்த்துவிட்டார். ஆனால், முன்னாள் பிரதமர் நரசிம்மராவைவிட மோசமாக பதில்பேசாமல் இருந்து வருகிறார் மூப்பனார்.

தன்னிடம் இருந்து அதிக இடங்களைப் பெறத்தான் த.மா.கா. இப்படி நடந்து கொள்கிறது என்று கோபமடைந்துள்ள ஜெயலலிதா,ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். முதலில் த.மா.கா.-காங்கிரஸ் கூட்டணிக்கு 40 இடம் வரைத் தருவதாகக் கூறியவர் இப்போது 32இடம் தான் தருவேன். அதில் காங்கிரசுக்கு நீங்கள் இடம் கொடுத்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி என்று திட்டவட்டமாகக்கூறிவிட்டதாகத் தெரிகிறது.

தொடர்ந்து தொகுதிகளின் எண்ணிக்கையை ஜெயலலிதா குறைத்துக் கொண்டே வருவதால் கோபமடைந்த மூப்பனார் பேசாமல்3வது அணி தான் சரிப்பட்டு வரும் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், சிலசாதிக் கட்சிகள் ஆகியவை த.மா.காங்கிரசுடன் கூட்டணி அமைக்க தயாராக உள்ளன.

இந்த அணியால் சிதறும் வாக்குகள் தி.மு.கவுக்குத் தான் சாதகமாக அமையும் என்று தெரிகிறது. எனவே தான் மூப்பனாரைமூன்றாவது அணி அமைக்க விடாமல் தடுக்கும் வேலையில் சோவும் கி. வீரமணியும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இந்த சண்டையால் தி.மு.க. கேம்பில் ஒரே கும்மாளம் தான். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி பயம் தான் தி.மு.கவை பிடித்துஆட்ட ஆரம்பித்துள்ளது. தமிழகத்தின் வட மாநிலங்களில் நல்ல செல்வாக்கு உடைய அக்கட்சியால் தி.மு.கவுக்கு பெரும்தலைவலியைக் கொடுக்க முடியும்,

திருச்சி, மதுரைக்கு அந்தப் பக்கம் (தென் தமிழகத்தில்) அ.தி.மு.கவுக்கு எப்போதுமே பெரும் செல்வாக்கு உண்டு. இதனால்,சென்னை நகரம், தஞ்சாவூர் பகுதிகள் தவிர மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அ.தி.மு.க.-பாட்டாளி மக்கள் கட்சிகூட்டணியின் கடும் எதிர்ப்பை தி.மு.க. சந்திக்க உள்ளது.

இதனால் மூப்பனாரையாவது இழுத்துப் போட்டு போட்டியை கொஞ்சம் நார்மலாக்க தி.மு.க. முயன்றது. ஆனால், தி.மு.க. பக்கம்செல்ல த.மா.கா. தொண்டர்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் அ.தி.மு.கவைத் தான் விரும்புகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+