கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மன் மரணம்
சிட்னி:
டெஸ்ட் கிரிக்கெட் உலகின் சரித்திர நாயகனான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சர். டொனால்ட் பிராட்மன் ஞாயிறன்று இறந்தார்.
பிராட்மன் பவுண்டேசன் அமைப்பின் இயக்குநரான ரிச்சர்ட் முல்வனி, ஏபிசிக்கு அளித்த தகவலில், சில காலமாக நிமோனியா நோயினால்பாதிக்கப்பட்டிருந்த பிராட்மன் ஞாயிறன்று அதிகாலை இறந்தார் என்றார்.
1930களிலும், 40களிலும் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் விளையாட்டுத்துறை நாயகனாக விளங்கிய பிராட்மன் அந்நாட்டு கிரிக்கெட் அணி தலைவராகஇருந்ததோடு கிரிக்கெட் போர்ட் நிர்வாகியாகவும் இருந்தவர்.
தனது சாதனைகளால் பாதிக்கப்படாத பிராட்மன் தன் வாழ்நாளின் பிற்பகுதியில் தன்னுடைய வீட்டை விட்டு வெளியே வராமல் தனிமை வாழ்க்கைமேற்கொண்டிருந்தார்.
இந்திய வீரர் டெண்டுல்கரின் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு தனது இல்லத்தில் அவருக்கு விருந்தளித்து கெளரவித்தார். டெண்டுல்கரின் ஆட்டம் தனது இளமைகாலஆட்டத்தை நினைவுபடுத்துவதாக தனது மனைவியிடம் தெரிவித்திருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது மனைவி 1997ம் ஆண்டு மறைந்தார். அதற்கு பின் தன்னுடைய ஒரே மகனுடன் வாழ்ந்து வந்த அவர்தனது 92வது வயதில் அடிலெய்டில் உயிர் நீத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சராசரியாக 99.94 ரன்களை குவித்த அவரது சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
கிரிக்கெட் உலகின் மற்ற சர்வதேச ஆட்டக்காரர்களான சர். கேரி சோபர்ஸ் (மே.இ.தீவுகள்), கவாஸ்கர் (இந்தியா), சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)பிரையன் லாரா (மே.இ.தீவுகள்) போன்றோரின் சராசரி பிராட்மனின் சராசரி ரன் விகிதத்தை காட்டிலும் 40 முதல் 50 ரன்கள் குறைவாகவேஉள்ளது.
எந்த ஒரு விளையாட்டிலும் சாதனையாளர்களுக்கிடையேயான வித்தியாசம் இந்தளவு இருந்ததில்லை என ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் பாப் ஹாக்,பிராட்மனிற்கான பாராட்டுவிழாவில் தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவின் வாழும் சாதனையாளர் என தற்போதைய பிரதமரால் புகழப்பட்டவர் பிராட்மன்.ஆஸ்திரேலியர்களுக்கு பிராட்மனை பற்றிபேசுவதிலும் கேட்பதிலும் சலிப்பே ஏற்படுவதில்லை.
இதுவரை பிராட்மன் பற்றி 7 புத்தகங்கள் வெளிவந்துள்ளதோடு அவருக்காக இரண்டு அருங்காட்சியகங்கள் ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications