அரசு நிலத்தை குறி வைக்கும் அமைச்சர் மகன்
சேலம்:
அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களை காலி செய்ய சொல்லி மிரட்டுவதாகதமிழக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மீது புகார் சுமத்தப்பட்டுள்ளது.
தேர்தல் வரும் நேரத்தில் இந்த புகார் கிளம்பியுள்ளதால் இது குறித்து விசாரிக்கசி.பி.சி.ஐ.டி போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருக்கும் 33 குடும்பங்களை வீட்டை காலிசெய்யாவிட்டால் கடும் விவுைகளை சந்திக்க வேண்டி வரும் என அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் மிரட்டியதாக அங்கு குடியிருப்பவர்கள் சில தினங்கள்முன் மனித உரிமை பாதுகாப்பு கழகத்திடம் முறையிட்டனர். இதையடுத்து தற்போதுஇது குறித்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பாதுகாப்பு இயக்க தமிழக நிறுவனர் கோவிந்தராஜன், உள்துறைசெயலாளர். காவல் துறை இயக்குனர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
அந்த புகாரில், சேலம் மாநகர் குகை, திருச்சி சாலையில்ஸ புலிக்குத்தி எதிரே அரசுபுறம்போக்கு நிலம் உள்ளது. இதன் இன்றைய மதிப்பு ரூ 2 கோடிக்கும் அதிகம் ஆகும்.
இங்கு 40 ஆண்டுகளுக்கும் அதிகமாக 33 குடும்பங்கள் வீடு கட்டி வாழ்ந்துவருகின்றனர். இவர்களை வீட்டை காலி செய்யுமாறு அமைச்சர் வீரபாண்டிஆறுமுகத்தின் மகன் ராஜாவும், அவரது நண்பர்களும் பயமுறுத்தி வந்தனர்.
இது குறித்து அண்ணாமலை என்பவரின் மகன் கோபால், பொன்னப்ப செட்டியாரின்மகன் ரகுநாதன், காளியண்ணன் மகன் குமார், சையத் சலாத் மகன் அலிஜான் ஆகியநால்வரும் அரசிடமும், அதிகாரிகளிடமும் புகார் செய்தனர்.
இதையடுத்து இவர்களை சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 18.20.28-ம் தேதி டாடாசுமோ காரில் வந்தவர்கள் அமைச்சரின் மகன் ராஜா அழைத்ததாக கூறி அழைத்துச்சென்றனர். இவர்கள் மாவட்ட தி.மு.க. அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கிருந்த ராஜா இவர்களிடம் வழக்கு நீதிமன்றம் என அலையவேண்டாம். அநத்இடத்தை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் காலி செய்துவிடுங்கள் என கூறினார்.
அப்போது கோபால், நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போதுநிலத்தை எப்படி வாங்குவது என கேட்டார்.
முஸ்லீம்கள் போட்ட வழக்கை வாபஸ் பெற சொல்லி விடுகிறேன். நீங்கள் வீட்டைக்காலி செய்யவில்லை என்றால் நான் காலி செய்ய வைத்து விடுவேன் எனமிரட்டியுள்ளார்.
அதன் பின் டிசம்பர் 29-ம் தேதி கோவிந்தசாமி என்பவர் வந்து ராஜா கோபமாகஇருக்கிறார். நீங்கள் வீட்டை காலி செய்யாவிட்டால், ராஜா வீட்டை தரைமட்டமாகஇடித்து விடுவார். பின் நீங்கள் தெருவில்தான் நிற்க வேண்டி வரும் என மிரட்டி விட்டுசென்றார்.
இதையடுத்து இந்த 33 குடும்பத்தினரும் உயிருக்கு பயந்து தான் வாழந்து வருகின்றனர்.
இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து இங்கு வசிப்பவர்களுக்கு பாதுகாப்புவழங்க வேண்டும். பிரச்சனை இருக்கும் நிலத்தை விலைக்கு வாங்கும் அமைச்சர் மகன்ராஜாவின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்குமாறு சேலம் சி.பி.சி.ஐ.டி.க்குஉத்தரவிடப்பட்டது. அதன்படி பாதிக்கப்பட்டவர்கள். அமைச்சரின் மகன்ராஜா,மனுதாரர் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சேலம் நகரில் நடந்து வரும் கட்டப்பஞ்சாயத்துகளிலும் அமைச்சர் வீரபாண்டிஆறுமுகத்தின் மகனுக்கு தொடர்புள்ளதாக ஏற்கனவே புகார்கள் வந்துள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications