இலங்கை டெஸ்ட்: சோகத்திலும் இங்கிலாந்து சாதனை

Subscribe to Oneindia Tamil

காலே(இலங்கை):

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியுற்றாலும் அந்த அணியின் முன்னாள் கேப்டன்அலெக் ஸ்டூவர்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 7000 ரன்களை கடந்தது அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.

இலங்கையின் ஸ்பின் அட்டாக்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்ட காலே கிரிக்கெட் பிட்சில் இலங்கையின் முத்தையா முரளீதரன் மற்றும் கேப்டன்ஜெயசூர்யாவின் சுழலில் சிக்கிய இங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவியது.

முதலில் ஆடிய இலங்கை அணியில் மறவன் அட்டபட்டு ஆட்டமிழக்காமல் இரட்டை சதமடித்ததோடு, அரவிந்த டி சில்வாவும் தனது பங்கிற்கு சதமடித்தார்.

இதனால் முதல் இன்னிங்ஸில் 5விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 470 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது இலங்கை. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில்,திரஸ்கோதிக் மட்டுமே சதமடித்தார்.

மற்ற வீரர்கள் சரியாக ஆடாததால் 253 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்து பாலோஆன் பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் அதே கதை தொடர்ந்ததால் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்த இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் 28ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இரண்டாவது முறையாக தொடர்ந்து இம்மைதானத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது இலங்கை. கடந்தாண்டு தென்னாப்பிரிக்கா அணியை வென்றது.இரட்டை சதமடித்த அட்ட பட்டு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இப்போட்டியில் நடுவர்களின் பல தீர்ப்புகள் இலங்கைக்கு சாதகமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+