சவுதியில் குவியும் ஹஜ் பயணிகள்
சவுதி அரேபியா:
இஸ்லாம் மதத்தின் 5 கடமைகளுள் ஒன்றான ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளுதல் தற்போது தொடங்கியுள்ளது.
இந்தாண்டு மார்ச் 3 ம் தேதி தொடங்கும் 5 நாள் மதச்சடங்கிற்கு இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புனித பயணமாக சவுதி வந்துள்ளதாகஅந்நாட்டு உள்துறை அமைச்சரான இளவரசர் நாயேவ் தெரிவித்துள்ளார்.
மெக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கான வசதிகளை பார்வையிட்டபின், ஞாயிறன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், ஹஜ் பயணிகள்பாதுகாப்பான முறையில் புனித பயணத்தை நிறைவு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக இதுவரை 180 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளன. தீப்பிடிக்காத கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு , தீயை அணைக்கதேவையான நீரை மலைப்பகுதியில் சேமிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
கடந்த 1997 ம் தேதி ஹஜ் கூடாரங்களில் ஏற்பட்ட தீவிபத்தில் 343 பேர் பலியாகினர். 1998ம் ஆண்டு ஹஜ் பயணத்தின் போது நெரிசலில் சிக்கி 119 பேர்
பலியாகினர். இதனையடுத்து சவுதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததால் கடந்த இரு ஆண்டுகள் ஹஜ் பயணம் அமைதியாக நடைபெற்றது.
இஸ்லாத்தின் 5வது கடமையான வசதி உள்ளோர் மேற்கொள்ள வேண்டிய ஹஜ் பயணத்தின் முக்கிய நிகழ்ச்சி மார்ச் 4 ம்தேதி மவுண்ட் அராபத்தில் நடைபெறும்வழிபாடாகும்.
இங்கு தான் முகமது நபி 14 நூற்றாண்டுகளுக்கு முன் தனது கடைசி நற்செய்தி கூட்டத்தில் பேசினார். ஹஜ்ஜிற்கு வரும் பயணிகள் தாங்கள் செய்த பாவங்களைஇறைவன் மன்னிக்க வேண்டும் என்பதற்காக இப்பயணம் மேற்கொள்கின்றனர்.
ஹஜ் பயணம் மேற்கொள்ளப்படுகின்ற இம்மாதத்தில் நடைபெறும் தியாக பண்டிகையான பக்ரீத் பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு பல்வேறு வகைஉதவிகளை வசதியுள்ள முஸ்லீம்கள் வழங்குவர்.
இந்திய ஹஜ் குழு: காஷ்மீர் முதல்வர் தலைமையில் ஜெட்டா வந்த 17 நபர் இந்திய ஹஜ் குழுவை சவூதிக்கான இந்திய தூதர் தல்மிஸ் அஹமது வரவேற்றார்.
ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அலுவலக செய்திகுறிப்பில், இக்குழு சவூதியின் பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்திப்பதோடு ஹஜ் வரும் இந்தியபயணிகளையும் சந்திக்கிறது.
இந்தியாவிலிருந்து வரக்கூடிய 1லட்சத்திற்கும் மேற்பட்ட ஹஜ் பயணிகளில் 70ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்திய அரசின் மத்திய ஹஜ் குழு மூலமும்மற்றவர்கள் தனிப்பட்ட ஏற்பாடுகளின் மூலமும் ஹஜ் பயணம் மேற்கொள்வர்.
ஹஜ் பயணத்திற்கு வரும் இந்திய பயணிகள் அனைவருக்கும் தேவையான உதவிகளைச் செய்ய ஜெட்டா அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளதாகஅச்செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications