காஷ்மீர் பிரச்சனையும் காயிதே மில்லத்தும்
சென்னை:
காயிதே மில்லத் உயிருடன் இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சனை மோசமான நிலையை அடைந்திருக்காது என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார் .
சென்னையில், இந்திய முஸ்லீம் லீகின் மறைந்த தலைவர் காயிதே மில்லத் என்றழைக்கப்பட்ட முகமது இஸ்மாயிலிற்கு நினைவு மண்டபம் கட்ட அடிக்கல்நாட்டி பேசிய தமிழக முதல்வர்,
இந்திய பிரிவினையின் முடிவில் காயிதே மில்லத்தை தொடர்பு கொண்ட லியாகத் அலிகான் போன்ற பாகிஸ்தான் தலைவர்களிடம் பாகிஸ்தானில்சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் உரிமைகளை பாதுகாக்க கேட்டுக் கொண்டவர் மறைந்த தலைவர் அவர். அவர் மேலும் சில காலம் உயிருடன்இருந்திருந்தால் காஷ்மீர் பிரச்சனை மோசமான நிலையை அடைந்திருக்காது.
தமிழின் மீது தணியாத பற்று கொண்ட காயிதே மில்லத் நேரு காலத்தில் நாடாளுமன்றத்தில் உருது மொழியில் பேச சொன்னதற்கு ஆங்கிலமும், உருதும் அந்நியமொழிகள், தமிழே தனது தாய்மொழி எனக் கூறியவர்.
1947-50 காலகட்டத்தில அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக இருந்த அவர் தமிழை ஆட்சி மொழியாக்க குரல் கொடுத்தவர்.
இந்நினைவு மண்டபத்திற்கு தற்போது அடிக்கல் நாட்டப்படுவதால், தேர்தல் ஆதாயத்திற்காக இதனை செய்வதாக நினைக்கக் கூடாது.
இந்திய முஸ்லீம் லீகின் மறைந்த தலைவர்களுள் ஒருவரான அப்துல் சமது இருக்கும் போதே கட்டப்பட வேண்டிய இந்நினைவு மண்டபத்திற்கு சில முஸ்லீம்பெருமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே நினைவு மண்டபம் கட்ட தாமதமேற்பட்டது என தெரிவித்தார் கருணாநிதி.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications