சோ - மூப்பனார் மீண்டும் ஆலோசனை
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து துக்ளக் ஆசிரியர் சோவும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்மூப்பனாரும் திங்கள்கிழமை சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்கள்
மார்ச் 1-ம் தேதிக்குள் கூட்டணி குறித்து மூப்பனார் அறிவிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கெடு விதித்துள்ளார்.இதையடுத்து மூப்பனார் வீட்டில், திங்கள்கிழமை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின் வெளியே வந்த மூப்பனார் செய்தியாளர்களிடம் பேசுகையில், மார்ச் 1-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்குமாறு ஜெயலலிதாகூறியுள்ளார். அதற்குள் முடிவெடுக்க முயற்சிப்போம்.
மார்ச் 1 என்று ஜெயலலிதா கூறியிருப்பது கெடு அல்ல. அதற்குள் முடிவைக் கூறுங்கள் என்றுதான் அவர் கூறியுள்ளார். விரைவில் எங்களது முடிவைத்தெரிவிப்போம். எங்களுக்கும் பல சிரமங்கள் உள்ளன. அவரது கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைமையில், தமிழகத்தில் 3-வது அணி வருமா என்று தெரியாது. ஆனால் எங்களது அணி முதலாவது அணியாவே வரும்வாய்ப்புள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸைப் பொத்தவரை எல்லாக் கதவுகளும் திறந்தே உள்ளன. எல்லா வாய்ப்புகள் குறித்தும் விவாதித்து வருகிறோம்.
ப. சிதம்பரம் எந்த விவாதத்திலும் கலந்து கொள்வதில்லை என்று கூறுகிறார்கள். அது தவறு. ஞாயிற்றுக்கிழமை கூட அவருடன் விவாதித்தேன்என்றார் மூப்பனார்.
சோவுடன் 1 மணி நேரம் ஆலோசனை:
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ, அங்கு வந்தார். அவருடன் மூப்பனார் சுமார் 1 மணி நேரம் தனியாக பேசினார். இந்தசந்திப்புக்குப் பிறகு சோவிடம் செய்தியாளர்கள், ஜெயலலிதா விதித்துள்ள கெடு குறித்துக் கேட்டபோது, மூப்பனாருக்காக முதுகு ஒடியும் அளவுக்கு வளையமுடியாது என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அப்படி நேராதவாறு அவர் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
யாருக்கும் அட்வைஸ் தரும் நிலையில் நான் இல்லை. தரவும் மாட்டேன்.
மூன்றாவது அணி என்பது ஒரு ஜோக் என்று மூப்பனாரே கூறியுள்ளார். எனவே மூன்றாவது அணி அமையுமா என்பது குறித்து நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள் என்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications