நெல்லை மாவட்டத்தில் நிலநடுக்கம்
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது.
திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
தென்காசி, இடைகால், நெடுவயல், சுந்தரபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
நயினாரகத்தில் 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. சாம்பவர் வடகரையில் சுமார் 10 வினாடிகளுக்கு நிலநடுக்கம் நீடித்ததாக அப்பகுதி மக்கள்தெரிவித்தனர்.
திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் கீழே உருண்டு விழுந்தன. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த மக்கள்வீடுகளிலிருந்தும், கடைகளிலிருந்தும் வெளியேறினர்.
செங்கோட்டையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இப்பகுதியில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர்.
வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் அச்சம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் வீடுகளுக்குள் செல்லவில்லை. லேசான நிலநடுக்கம் என்றுதெரிந்தபின் தான் அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
கலெக்டர் விரைந்தார்:
நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து தெரிந்தவுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தனவேல் மாலையில் அப்பகுதிகளுக்கு நேரில் சென்று நிலநடுக்கம் குறித்துவிசாரித்தார்.
வடஇந்தியாவில் நிலநடுக்கம்:
முன்னதாக, இந்தியாவின் வடக்குப்பகுதிகளான டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், சண்டீகர், காஷ்மீர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 6.7என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications