சால்வேடரில் நிலநடுக்கம்
சான் சால்வேடர் (அமெரிக்கா):
சான் சால்வேடரில் ஞாயிற்றுக்கிழமை 4.6 என்ற ரிக்டர் அளவில் 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பெரிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
2001 ம் ஆண்டு ஏற்கனவே சான் சால்வேடரில் இரண்டு முறை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 7.6 என்ற ரிக்டர் அளவிலும், இரண்டாவதுநிலநடுக்கம் 6.6 என்ற ரிக்டர் அளவிலும் உணரப்பட்டது.
இரண்டு நிலநடுக்கங்களிலும் சேர்த்து 1,150 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமையும் சான் சால்வேடரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.இந்த நிலநடுக்கங்கள் முதலில் 4.6 என்ற ரிக்டர் அளவிலும் பின்னர் 2.9 மற்றும் 3.7 ரிக்டர் அளவுகளிலும் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் இப்பகுதியில்வசித்து வரும் 1.2 மில்லியன் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடினார்கள்.
இதையடுத்து திங்கள்கிழமை அப்பகுதியிலுள்ள பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஏற்கனவே சால்வேடரில் 2001 ம் ஆண்டு ஜனவரி 13 ம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதையடுத்து பிப்ரவரி 13 ம் தேதி மீண்டும் நிலநடுக்கம்ஏற்பட்டது. இதையடுத்து 4,000 முறை சிறிய, சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications