தீ விபத்தைத் தடுக்க செயற்கைக்கோள்
டெல்லி:
இந்தியா, ஜெர்மன் உதவியுடன் உருவாக்கியுள்ள செயற்கோளை பயன்படுத்தி தீ விபத்துகளை கண்டறிந்து கட்டுபடுத்தவுள்ளது.
ஜெர்மன் தூதரகத்திலிருந்து வெளிவரும் ஜெர்மன் நியூஸ் என்ற பத்திரிகை இத்தகவலை தெரிவித்துள்ளது.
அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜெர்மனி விண்வெளி மையத்தின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட செயற்கைகோள் மே மாதம் ஸ்ரீஹரிகோட்டாவிண்வெளி மையத்திலிருந்து ஏவப்படவுள்ளது.
இந்த செயற்கோளின் உதவியுடன் புவியின் வெப்ப மாறுதல்கள் பற்றி இந்திய, ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள் ஆராயவுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டுள்ள இடங்களை கண்டறிய குளிர்விக்கப்பட்ட நவீன அகச் சிவப்புகதிர்களை பயன்படுத்தப்பட உள்ளது. இச்செயற்கைகோளில் உள்ளகாமிராக்கள் தீ விபத்துகளை மற்ற வகை தீயிலிருந்து வேறுபடுத்தி அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த செயற்கைகோளில் பயன்படுத்தப்படும் நவீன தொலையுணர்வு கருவிகளின் உதவியுடன் காட்டுத் தீ போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவன வளங்களை தீ விபத்திலிருந்து காக்க முடியும்.
100 கிலோ எடையுள்ள இந்த செயற்கோள் தயாரிப்பில் பல்வேறு புதிய நவீன கருவிகள் பயன் படுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் இந்தியாவில்சோதிக்கப்பட்ட இச்செயற்கை கோளின் இறுதி கட்ட பணிகள் ஜெர்மனியில் நடைபெற்று வருகின்றன என அப்பத்திரிகை தெரிவிக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications