கல்வியிலும் மதவாதம்? மத்திய அரசு மீது ஆசிரியர்கள் புகார்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
மத்திய அரசு கல்வித்திட்டத்தில் மதவாதத்தை புகுத்துவதாக தமிழக பள்ளி ஆசியர்கள்கூட்டமைப்பு குறை கூறியுள்ளது.
தமிழக ஆசிரியர் கூட்டமைப்பின் அனைத்திந்திய பொதுச் செயலாளர் நடேசன்பத்திரிக்கை குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் கூட்டமைப்பு நடத்தவிருக்கும் ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் கூட்டத்தில்மத்திய அரசசின் போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். கல்வி திட்டமும்,வேலைவாய்ப்பும் எல்லாரும் அடிப்படை உரிமை என்பது போன்ற சட்டமாக்கவேண்டும் என வலியுறுத்தப்படும்.
மத்திய அரசு துவக்கப்பள்ளிக்கு அதிக நிதி ஓதுக்கீடு வழங்க வேண்டும். எல்லாதுவக்கப்பள்ளிகளிலும் சத்துணவு அளிக்க வழிவகை செய்ய வேண்டும்.
மாநில அரசு எல்லா பள்ளிகளிலும் தமிழ் வழி கல்வியை கட்டாயமாக்க வேண்டும்என்ற தீர்மானமும் நிறைவேற்றபடும் என கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications