3 வது அணி பற்றி கவலையில்லை: வைகோ
-சென்னை:
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைந்தாலும் தி.மு.க.தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என ம.தி.மு.க. பொதுசெயலாளர்வைகோ தெரிவித்தார்.
சென்னையில் ம.தி.மு.க.தலைமை அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
பிரதமர் வாஜ்பாயின் கரத்தை வலுப்படுத்த வருகின்ற தமிழக தேர்தலில் தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறஉழைக்குமாறு கட்சியினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மட்டுமல்லாது புதுவையிலும் இக்கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரைவழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3வது அணி அமைந்தாலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். தொகுதி பங்கீடு குறித்து தேசீய ஜனநாய கூட்டத்தில்தெரிவிக்கப்படும் என கூறினார்.
திருநாவுக்கரசு பேட்டி: சென்னையில் நிருபர்களை சந்தித்த எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு, எம்.பி, தமிழகத்தில் உள்ள 234தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ள எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க., தமிழக முதல்வர் கருணாநிதி கொடுக்கும் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும்.
தொகுதி பங்கீடு விஷயத்தில் அ.தி.மு.க. கூட்டணி போல் இல்லாமல் சுமுகமாக பேசித் தீர்க்க தமிழக முதல்வர் இருக்கிறார்.
அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பிரச்சனை தொடர்ந்து இருந்த போதிலும் அக்கூட்டணியுடனேயே இது குறித்து த.மா.கா. பேச்சு நடத்துவதுவேடிக்கையாக உள்ளது.
வருகின்ற தேர்தலில் ஜெயலலிதா மட்டுமல்ல அவரது தோழி சசிகலாவும் போட்டியிட முடியாது. பாட்டாளி மக்கள் கட்சியின் விலகலால் தி.மு.க.கூட்டணிக்கு பாதிப்பு ஏதுமில்லை.
பிரதமர் வாஜ்பாய் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் செயல்படுத்தியுள்ள சிறப்பான திட்டங்களால் தி.மு.க. கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும்என்றார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications