வீரப்பனின் இன்னொரு கூட்டாளி சாரையன் கைது
அந்தியூர்:
சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருந்த வீரப்பன் கூட்டாளி சாரையனை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
தமிழக - கேரள எல்லைப் பகுதியில் இருந்த வீரப்பன், பண்ணாரி, சத்தியமங்கலம் காட்டுக்குத் தப்பிச் சென்றதும், அதிரடிப்படையினரின் கவனம் அங்குதிரும்பியது. அதிரடிப்படையினர் தற்போது இங்குள்ள காடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஒரு கும்பல் எண்ணமங்கலம் பிரிவு என்ற இடத்திற்கு அருகில் சந்தன மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். அவர்களைப் பிடிக்க போலீசார்முயன்றபோது அனைவரும் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதில் ஒருவர் மட்டும் சிக்கினார்.
சிக்கிக் கொண்ட சாரையன், பல்வேறு இடங்களில் சந்தனமரங்களைக் கடத்தியது தொடர்பாக கர்நாடகா மற்றும் தமிழகப் போலீசார் தேடப்பட்டுவந்தவர்.
சில நாட்களுக்கு முன்பு வீரப்பனிடமிருந்து பிரிந்து வந்து தனியாக சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார். கைது செய்யப்பட்ட சாரையனிடமிருந்து சந்தனமரங்கள் மற்றும் அரிசி, ராகி ஆகியவை உட்பட பல்வேறு பொருட்களைக் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட சாரையன், பவானி ஜூடிசியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications