கெளடா மனைவிக்கு சென்னை டாக்டர்கள் சிகிச்சை
சென்னை:
ஆசிட் வீச்சால் காயமடைந்து பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் மனைவி சென்னம்மாவிற்கு,சென்னையைச் சேர்ந்த இரண்டு பிளாஸ்டிக் சர்ஜரி டாக்டர்கள் பெங்களூர் சென்று சிகிச்சை அளித்தனர்.
சென்னம்மா கெளடா மீது அவரது உறவினர் ஒருவர் ஆசிட் வீசினார். இதில் காயமடைந்த சென்னம்மா பெங்களூர் மல்லையா மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நி லையில், சென்னையைச் சேர்ந்த பிளாஸ்டிக் சிகிச்சை நிபுணர்களான டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணா, டாக்டர்பாலாஜி ஆகிய இருவரும் பெங்களூர் சென்று சென்னம்மாவிற்கு சிறப்பு சிகிச்சை அளித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக ஐக்கிய ஜனதா தளத் த லைவர் ஜி.ஏ. வடிவேலு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சையில்சிறந்தவர்களான டாக்டர் மாதங்கி ராமகிருஷ்ணா மற்றும் டாக்டர் பாலாஜி ஆகிய இருவரும் எங்களது வேண்டுகோளை ஏற்று பெங்களூர் மல்லையாமருத்துவமனை சென்று சென்னம்மாவிற்கு சிறப்பு சிகிச்சை அளித்தனர்.
அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் உதயசங்கர், தாஸ், ஆனந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை குறித்துவிவாதித்தனர். சில ஆலோசனைகளையும் அவர்கள் தெரிவித்தனர். இன்னும் 10 நாள் கழித்து மற்றொரு அறுவைச் சிகிச்சை செய்யுமாறும் அறிவுறுத்தினர்.
எங்களது கோரிக்கையை ஏற்று மனிதாபிமானத் தோடு பெங்களூர் சென்று சென்னம்மாவிற்கு சிகிச்சை அளித்த இரு டாக்டர்க ளையும் ஐக்கிய ஜனதாதளம்பாராட்டுகிறது என்று கூறப்பட்டிருந்தது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications