கணவர்களை எலி மருந்து கொடுத்துக் கொன்ற மனைவி
பீஜிங்:
பணத்துக்காக தனது நான்கு கணவர்களை எலி மருந்து கொடுத்துக் கொன்றார் சீனாவைச் சேர்ந்த பெண்.
தனது நான்கு கணவர்களைக் கொன்றதன் மூலம் 27, 000 யான்கள் ( 3, 250 டாலர்கள்) கிடைத்துள்ளது.
இதுகுறித்து சீனாவில் உள்ள ஸின்மின் மாலைப் பத்திரிக்கையில் வெளியான செய்தி:
சீனாவைச் சேர்ந்தவர் லீ ஹியூஜி. வயது 24. இவர் மூன்று முறை திருமணம் செய்து தனது மூன்று கணவர்களையும் கொன்று விட்டார்.
நான்காவதாக, ஹூவாங் ஸிகியூயாங் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜனவரி 21 ம் தேதி நடந்தது. திருமணத்துக்கு முன்பேஹூவாங்க் லீ க்கு 3,000 யான்கள் (360 டாலர்கள்) கொடுத்தார். அதற்குப்பின்னும் பணம் கொடுக்கக் கோரி லீ, ஹூவாங்க்கைக்கொடுமைப்படுத்தினார். திருமணத்துக்குப் பிறகு அவரையும் கொன்றார்.
இதையடுத்து ஹூவாங்கின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் விசாரணையில் லீ தனது நான்காவது கணவர் ஹூவாங்கை எலி மருந்து கொடுத்துக்கொன்றிருக்கிறார் என்று தெரிய வந்தது.
மேலும் லீ மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சீனாவிலுள்ள ஹெனான் பகுதியில் வசித்து வந்தவர். பணத்திற்காக நான்கு பேரைத் திருமணம் செய்துகொலை செய்துள்ளார். இதற்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக இவரது தாயையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
1998 ம் ஆண்டு டிசம்பர் மாதம் லீ க்கு முதல் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு லீ தனது முதல் கணவரிடமிருந்து ரூ 11, 000 யான்களை வாங்கி தனதுகுடும்பத்துக்குக் கொடுத்தார். திருமணமான 3 நாட்களில் எலி மருந்தைக் கொடுத்து அவரைக் கொன்றார்.
இதே போல் தான் தனது இரண்டாவது மற்றும் 3 வது கணவன்மார்களையும் கொன்றார் லீ என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications