அப்துல் மதானியை விடுவிக்கக் கோரி ஊர்வலம்
கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுதலை செய்யக் கோரிஅக்கட்சியினர் திங்கள்கிழமை கோவையில் ஊர்வலம் நடத்த முயன்றனர்.
ஆனால், இவர்கள் கேரள தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் அங்குகுவிக்கப்பட்டனர்.
கோவை சிறையில் குண்டு வெடிப்பு வழக்குத் தொடார்பாக கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் கேரள ஜனநாயக மக்கள் கட்சியைச் சேர்ந்த அப்துல் நாசர்மதானியை விடுவிக்க வேண்டும் எனக் கோரி அவரது கட்சியினர் கோவை வாளையார் பகுதியில் ஊர்வலமாக வந்தனர்.
இவர்களுக்கு ஏற்கனவே தமிழக போலீசார் அனுமதி மறுத்திருந்ததால், தமிழக எல்லைப் பகுதியான வாளையாரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டபோலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், கேரளாவில் இருந்த வந்த கேரள மக்கள் கட்சித் தொண்டர்கள், கேரள மாநிலத்திற்குள்ளேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை கேரள போலீசாரே தடுத்து நிறுத்தினர். இதையடுத்து கோவை போலீசாருக்கு எவ்வித சிக்கலும்,இல்லாமல் ஊர்வலம் ரத்தானது.
கோவையில் கடந்த 98ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்து குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இந்த வழக்குத் தொடர்பாக கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக கோவைசிறையில் இருந்து வருகிறார். கோவையில் குண்டு வெடிப்பு வழக்கு விசாரணைக்கென தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
விசாரணை துவக்க நிலையில் உள்ள இந்த வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுவிக்க வேண்டும் எனஅவரது கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் விசாரணை துவங்குவதாலும், வழக்கின் முக்கியத்துவம் கருதியும் அவரை விடுவிக்கஇயலாது என நீதிமன்றம் விடுவிக்க மறுத்து விட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications