நடுங்கின அசாம், பூடான்
கவுஹாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா மாநிலங்களிலும், அண்டை நாடான பூட்டானிலும் செவ்வாய்க்கிழமை காலை 4.7 என்றரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், அசாம் மாநிலம் கவுஹாத்தியில் வாழும் மக்களின் மனதில் இன்னும் குஜராத்தில் ஏற்பட்ட பூகம்ப பீதிமறையவில்லை. இதனால் நிலநடுக்கம் லேசாக ஏற்பட்டவுடனேயே அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓடி விட்டனர்.
செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றனர்.
மேகாலயா தலைநகர் ஷில்லாங் பூகம்பவியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், செவ்வாய்க்கிழமை காலை சரியாக 7.16 மணிக்கு நிலநடுக்கம்ஏற்பட்டது. 4.7 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றார்.
கவுஹாத்தியைச் சேர்ந்த பெண் எல் ரஹ்மான் கூறுகையில், நான் என் வீட்டு சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென்று எங்கள் வீடுகுலுங்க ஆரம்பித்தது. உடனடியாக நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டோம். குஜராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இன்னும் எங்கள் கண்முன்னேநிற்கிறது என்றார்.
முன்னதாக, குஜராத்தில் குடியரசு தினமான ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் 25, 000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டது.
பூகம்பவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்த், திரிபுரா ஆகிய மாநிலங்களில்நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
1897 ம் ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் 8.7 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,600 க்கும் மேற்பட்டோர்உயிரிழந்தனர்.
அசாமில் 1950, ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி 8.5 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1, 500 பேர் உயிரிழந்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications