ஆயுத பேர ஊழலில் இடைத்தரகர்கள் உள்ளனர்: விட்டல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்திய பாதுகாப்புத் துறைக்கான ஆயுத பேரங்களில் இடைத்தரகர்கள் இருப்பதாக மத்திய ஊழல் தடுப்புகண்காணிப்பு ஆணையம் தெரிவித்த கருத்தை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது தெஹல்கா நிறுவனம்அம்பலப்படுத்திய ஊழல் என்று மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் விட்டல் தெரிவித்தார்.

ஆயுத பேர ஊழல் என்பது இந்தியாவிற்கு புதியது அல்ல. ஏற்கனவே, போபர்ஸ் பீரங்கிகள் மற்றும் நீர்மூழ்கிகள்வாங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனால், ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி1989 ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை இழந்தது.

அந்த ஊழலை கூறி ஆட்சிக்கு வந்த வி.பி.சிங் அரசு இந்திய பாதுகாப்புத்துறைக்கான ஆயுத பேரங்களில்இடைத்தரகர்கள் ஈடுபட 1989ம் ஆண்டு தடை விதித்தது.

அதற்குப் பின்னர் நடைபெற்ற பல்வேறு ஆயுத பேரங்களில் இடைத்தரகர்கள் செயல்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

அதனையடுத்து, இதுகுறித்து விசாரிக்குமாறு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்புஆணையத்திற்கு உத்தரவிட்டார் அப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ்.

அதனை விசாரித்து வந்த ஆணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது இடைக்கால அறிக்கையை மத்திய அரசிடம்அளித்து இருந்தது. தெஹல்கா நிறுவனம் அம்பலப்படுத்திய ஆயுத பேர ஊழல் குறித்த வீடியோ பதிவுகளையும்ஆராய்ந்தது ஊழல் தடுப்பு ஆணையம்.

விசாரணையின் இறுதி அறிக்கையை மத்திய பாதுகாப்பு அமைச்ர் ஜஸ்வந்த் சிங்கிடம் சனிக்கிழமை அளித்தார்மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையர் விட்டல். அதன் பின் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தவிட்டல்,

ஆணையம் அளித்த இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டவற்றை உறுதிப்படுத்துவதாக தெஹல்கா நிறுவனம்வெளிப்படுத்திய ஊழல் அமைந்து உள்ளது. ஆணையத்தின் அறிக்கை மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாகபாதுகாப்பு அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

இந்த விசாரணையின் போது 25 ஆயுத பேரங்கள் சம்பந்தப்பட்ட 500 பைல்களை ஆராய்ந்த பின் ஆணையம்தனது அறிக்கையை அளித்து உள்ளது. இடைத்தரகர்கள் குறித்து மட்டும் ஆணையம் விசாரிக்கவில்லை.

விமானங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட விமானப்படை அதிகாரி புரோகித் மற்றும்நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் மல்ஹோத்ரா ஆகியோர் குறித்தும் ஆணையம் விசாரித்தது என தெரிவித்தார்.

பாதுகாப்புத்துறையில் 75 கோடி ரூபாய் மதிப்பிற்கு மேல் ஆயுதங்கள் வாங்கினால் அந்த பேரம் முடிந்த ஒருமாதத்திற்குள் அது குறித்து மத்திய ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையமும், மத்திய தணிக்கைதுறை அதிகாரியும்விசாரிக்க வேண்டும் என ஜார்ஜ் பெர்னான்டஸ் உத்தரவிட்டு இருந்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+