சந்தனக் கட்டை கடத்திய வீரம்மாள்கள்!
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை:
வீரப்பன் ஸ்டைலில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சந்தனக் கட்டைகளைக் கடத்திய 3 பெண்களைப் போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு வந்த பேருந்தில், 3 பெண்கள் வந்தனர். அவர்கள் 3 பேரும் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் சிறு சிறு பைகளுடன்இறங்கினர்.
இந்தப் பைகளில் சந்தனக் கட்டைகளை எடுத்து வந்துள்ளனர். இவற்றை கேரளாவிற்குக் கடத்தி விற்க விற்பனை செய்வதற்காக அவர்கள்திட்டமிருந்தனர்.
இந்த பைகளில் போலீசார் நடத்திய சோதனையில் 150 கிலோ சந்தனக் கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றைப் போலீசார் கைபற்றி 3பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் செய்தனர். மேலும், இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications