வருத்தமளிக்கும் பட்ஜெட்: உடல் ஊனமுற்றவர்கள்
டெல்லி:
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மிகவும் உடல் ஊனமுற்றவர்களுக்கு வருத்தமளிப்பதாகவும், நலத்திட்டங்கள் எதுவும் இல்லாததாகவும் உள்ளது என்று உடல் ஊனமுற்றோர் வேலைவாய்ப்பு துறை அமைப்புஇயக்குநர் ஜாவித் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து ஜாவித் அபிடி கூறியதாவது:
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உடல் ஊனமுற்றோர்களின் நலனிற்காகவும், வளர்ச்சிக்காவும்திட்டங்கள் எதுவும் இல்லை. இது எங்களை மிகவும் வருத்தமடைய வைக்கிறது.
இந்தியாவில் 70 மில்லியன் மக்கள் உடல் ஊனமுற்றவர்களாக உள்ளனர். இவர்களில் ஒரு சதவீதம் பேருக்குத்தான்வேலை வாய்ப்புக்கள் உள்ளது. பிறர் வேலை இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
உடல் ஊனமுற்றவர்கள் வீட்டில் அமர்ந்திருந்தால் போதும். அவர்கள் யாரும் வேலைக்குச் செல்ல வேண்டாம்என்று நினைக்கிறது மத்திய அரசு. சீனாவில் 70 சதவீதம் உடல் ஊனமுற்றவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள்உள்ளது.
கடந்த 5 வருடங்களாக எங்களுக்குள்ள உரிமைகள் முறையாகக் கிடைக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திவருகிறோம் என்றார்.
ஜாவித்தும் உடல் ஊனமுற்றவர்தான். இவர் உடல் ஊனமுற்றோர்களின் உரிமைகளுக்காகப் பல முறைபோராட்டங்கள் நடத்தியவர். மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போது, கணக்கெடுப்பில் உடல்ஊனமுற்றவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியாக நின்றவர் இவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications