சிங்கப்பூரில் சேயைத் தேடுகிறார் தாய்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

போலீசார் பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் தனது குழந்தையை ஹோட்டல் அறையில் விட்டு விட்டு ஓடிய,சிங்கப்பூரில் அனுமதியில்லாமல் வசித்து வந்த பெண் ஒரு வருடம் கழித்து தன் குழந்தையை மீட்டுத் தர வேண்டும்என்று கூறுகிறார்.

தாய்லாந்திலிருந்து சிங்கப்பூரில் அனுமதியில்லாமல் குடியேறியவர் அர்னாய் கானிதா. இவர் அங்குள்ளஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது ஹோட்டல் நிர்வாகத்தார் இவர் அனுமதியில்லாமல்சிங்கப்பூரில் குடியேறியவர் என்று கண்டு பிடித்தனர்.

இதை அறிந்து கொண்ட கானிதா, அங்கு தன் குழந்தையை விட்டு விட்டுத் தப்பித்து ஓடி விட்டார்.

இதையடுத்து, அந்தப் பெண் குழந்தையை ஹோட்டல் நிர்வாகத்தார் கே.கே பெண்கள் மற்றும் குழந்தைகள் நலமருத்துவமனையில் சேர்த்தனர்.

அதற்கு பேபி சாரா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள் அக்குழந்தைக்குத்தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தனது குழந்தையைத் தந்து விடுங்கள் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார் கானிதா.

இதுகுறித்து மாவட்ட நீதிபதி எடி தாம் கூறுகையில், குழந்தை வேண்டும் என்று கூறும் கானிதாவுக்கு அவரிடம்மீண்டும் குழந்தை சாராவை திருப்பிக் கொடுக்கப்படுவது குறித்து ஆலோசிப்போம். தற்போது குழந்தையைவளர்க்க முடியாத சூழ்நிலையில் உள்ளார் கானிதா என்றார்.

கானிதா சிங்கப்பூர் ஹோட்டலில் கடந்த அக்டோபர் 15 ம் தேதி வேலைக்குச் சேர்ந்தார். அப்போது ஹோட்டல்நிர்வாகத்தார் அவரது நடவடிக்கையில் சந்தேகம் கொண்டு போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீஸ் தன்னைப் பிடிக்க வந்து விடுவார்களோ என்ற பயத்தில் கானிதா தனது குழந்தையை ஹோட்டல்அறையிலேயே விட்டு விட்டுத் தப்பித்து விட்டார். அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து கானிதா கைதுசெய்யப்பட்டார்.

இவரது கணவர் சில வருடங்களுக்கு முன் இவரை விட்டு விட்டுச் சென்று விட்டார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+