முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு 4 ஆண்டு கடுங்காவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம்விதிக்கப்பட்டது.

பல் வேறு உயர் பதவிகளை வகித்தவர் ஐ.ஏ.எஸ்.அதிகாரி பாண் டே. இவர் வருமானத்துக்கு மீறிய வகையில் சொத்து சேர்த்ததாகவும், சென் னையில் வணிகவளாகம் கட்டியது, கொடைக்கானலில் பங்களா வாங்கியது உள்பட பல்வேறு புகார்களைக் கூறி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார், முதலாவது தனிநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

1985-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு மே 31-ம் தேதி வரை ரூ. 10.3 கோடிக்கும் மேல் சொத்து சேர்த்ததாக பாண்டே மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 1999ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. டிசம்பர் 24ம் தேதிகுற்றங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 79 சாட்சிகளும், பாண்டே தரப்பில் 11 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். கடந்த மாதம் 15-ம் தேதி சாட்சிகள்விசாரணை முடிந்தது. அதையடுத்து 26-ம் தேதி வக்கீல்கள் விவாதம் முடிந்தது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதிஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் கூறியிருந்தார்.

அதன்படி வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. காலை 10.30 மணிக்கு நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் நீதிமன்றம் வந்தார். பாண் டேயும்நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம், உங்க ளை குற்றவாளி என்று தீர்மானித்துள்ளேன். ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்றார். அதற்கு பாண் டே,குறைந்த பட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

பின்னர் நீதிபதி தனது தீர்ப்பில், இதுவரை நடந்த விசாரணயின் அடிப் ப டையில் பாண் டே மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபனமாகியுள்ளன. என வே அவருக்குஊழல் தடுப்புச் சட்டத்தின் இரு பிரிவுகளின் கீழ் 4 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்படுகிறது. மேலும், ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

பாண் டே தனது வருமானத்துக்கு வராத வகையில் ரூ. 1 கோடியே 32 லட்சத்து 107 ரூபாய் அளவுக்கு சொத்து வாங்கியுள்ளதும் நிரூபனமாகியுள்ளது. எனவே இந்த சொத்துக்க ளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிடுகிறேன். இது தொடர்பான நடவடிக்கையை சென் னை மாவட்ட ஆட்சியர் மேற் கொள்ளவேண்டும் என்றார்.

தீர்ப்பு கூறப்பட்டவுடன், பாண் டே பலத்த பாதுகாப்புடன் போலீஸ் வேனில் வேலூர் மத்திய சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தீர்ப்பு மொத்தம் 192பக்கங்களில் இருந்தது. தீர்ப்பு முழுவதும் பாண்டேயை கடுமையாக விமர்சித்திருந்தார் நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன். 3 ஆண்டுக்கு மேல் தண்டனைவழங்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கில் ஜாமீன் பெற சென்னை உயர்நீதிமன்றத்தில்தான் விண்ணப்பிக்க வேண்டும்.

தனி நீதிமன்றம் வழங்கியுள்ள 18-வது தீர்ப்பு இது. முதலாவது நீதிமன்றத்தில் இது 9-வது தீர்ப்பாகும். இதற்கு முன் ஐ. ஏ.எஸ். அதிகாரிகள்சத்யமூர்த்தி, ஹரிபாஸ்கர், கற்பூரசுந்தரபாண்டியன், ஸ்ரீனிவாசன் ஆகியோருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+