கோவையில் காட்டு யானை தாக்கி முதியவர் சாவு

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவை அருகே காட்டு யானை தாக்கி முதியவர் இறந்தார்.

கோவை அருகே உள்ள ஆனைகட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலக் கவுண்டர் (70). இவர் ஆனைகட்டி மலைப்பகுதிக்குச் சன்று விறகுகளை சேகரித்தார். பின்னர், வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப்பகுதியில் யானைகள் கூட்டம் ஒன்று தண்ணீருக்காக தரைப் பகுதிக்கு வந்தன.

இதில் ஒரு யானை வெங்கடாசலத்தை விரட்டியது. அவரால் அதிக தூரம் ஓட முடியாத நிலையில் காலால் மிதித்துக்கொன்றது. அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.

கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வறட்சி நிலவி வருகிறது. எனவே யானைகள் கூட்டம்கூட்டமாக இப்போது தரைப் பகுதியை நோக்கி தண்ணீருக்காகப் படை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் யானைகள் எதிர்படும் மனிதர்களைத் தாக்கி வருகின்றன. இதனால் மலையோரப் பகுதிகளில்வாழும் மக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். ஏற்கனவே யானைகள் தாக்கியதில், இரண்டு பேர் இறந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+