2 சிங்களர்களை விடுவித்தனர் புலிகள்
கொழும்பு:
இலங்கையில் புத்த பிட்சுக்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, இரண்டு சிங்கள மீனவர்களை, விடுதலைப் புலிகள் வெள்ளிக்கிழமை விடுவித்தனர்.
இதுகுறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க செய்தித் தொடர்பாளர் ஹர்ஷா குணவர்த்தனே கூறியதாவது:
புலிகள், 20 க்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களை சிறைபிடித்து வைத்துள்ளனர். இவர்களை விடுவிக்குமாறு புத்த பிட்சுக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து2 சிங்கள மீனவர்களைப் புலிகள் வெள்ளிக்கிழமை விடுவித்துள்ளனர்.
விடுவிக்கப்பட்டுள்ள மீனவர்களின் பெயர்கள் அஜித் குமாரஸ்ரீ மற்றும் சந்திரபாலா. வவுனியாவில் புலிகள் இருப்பிடம் அருகே உள்ள கடலில் மீன பிடித்ததுதொடர்பாகக் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து வவுனியாவில் 18 புத்த பிட்சுக்கள், புலிகளைச் சந்தித்துப் பேசினார்கள். இதையடுத்து 2 சிங்கள மீனவர்களை அவர்கள் விடுவித்தனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
முன்னதாக, விடுதலைப்புலிகள் தங்களது தனி ஈழம் கோரிக்கையை முன்வைத்து கடந்த 1983 ம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள். இதற்கிடையேகடந்த 24 ம் தேதி முதல் புலிகள் சண்டை நிறுத்தத்தைக் கடைபிடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications