பிறந்த நாள் பரிசை பூகம்ப நிதிக்கு வழங்கினார் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகர மேயரும், முதல்வர் கருணாநிதியின் மகனுமான மு.க. ஸ்டாலின் தனது 49-வது பிறந்த நாள் விழாவின்போதுவசூலான ரூ. 2.3 லட்சம் பணம் மற்றும் பிற பொருட்களை குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
ஸ்டாலின் தனது 49-வது பிறந்த நாளை வியாழக்கிழ மை கொண்டாடினார். கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதி வீட்டில்அவர் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அப்போது திமுகவினர் மற்றும் பல்துறை பிரமுகர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்துத்தெரிவித்தனர்.
பிறந்த நாள் பரிசாக ரூ. 2.3 லட்சம் நிதி, பொன்னாடை, சால்வைகள், வேட்டிகள் சேர்ந்தன. இவற்றை தற்போது குஜராத் பூகம்பநிவாரண நிதிக்கு வழங்குவதாக மேயர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications